பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

271


"ஆம். 'நாம் ஒவ்வொரு நிமிஷத்தையும் பொருட்படுத்தித்தான் வேலை செய்ய வேண்டும். நெசவாளர் போராட்டத்தின் வெற்றி எத்தனை நிமிஷங்கள் தாமதமாகின்றதோ, அத்தனை நிமிஷங்களுக்குள் எவ்வளவு கோரங்கள், நஷ்டங்கள் ஏற்பட்டுவிடக் கூடும்? நித்த நித்தம் நாடெங்கிலும் ஆங்காங்கே ஊரூக்கு ஊர் பட்டினிச் சாவுகளும், தற்கொலைகளும் நேர்ந்து வரும் இந்த நெருக்கடியான கட்டத்தில் நாம் எவ்வளவுக்கெவ்வளவு துரிதமாய்ப் பணியாற்றி வெற்றி காண்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு இந்த நாட்டில் பல்வேறு மனித ஜீவன்களை சாவுப் பாதையினின்றும் தடுத்து நிறுத்த முடியுமே!' என்றெல்லாம் அவன் தனக்குள் அடிக்கடி எண்ணிப் பார்த்துக் கொண்டு இருந்தான். ஒவ்வொரு நிமிஷமும் ஒரு மனித உயிர்போல் அவனுக்குத் தோன்றியது; அந்த எண்ணம்தான் அவனைச் சிறிது நேரம் கூட ஓய்ந்திருக்கவிடாமல் ஓடியாடி உழைக்கத் தாண்டியது:

மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் மங்கம்மாள் சாலையை நோக்கி மணியும், ராஜுவும், நூற்றுக்கணக்கான நெசவாளர்களும் பொழுது விடிவதற்கு முன்பே புறப்பட்டுச் சென்றார்கள். மதுரை நகரின் ஊர் எல்லையிலேயே பட்டினிப் பட்டாளத்தினரை வரவேற்று அழைத்து வருவதற்காக அவர்கள் சென்றார்கள்; அவர்களைப்போல் நகரின் பல பாகங்களிலிருந்தும் தொழிலாளர்களும், பொது மக்களும் அதிகாலையிலேயே மங்கம்மாள் சாலையை நோக்கிப் புறப்பட்டு விட்டார்கள், பல்வேறு உபநதிகள் சங்கமமாகும் மகா சமுத்திரம் போல் மங்கம்மாள் சாலை. அன்று காலையில் மதுரை நகரத்தின் சந்து பொந்துகளிலிருந்தும் தொழிலாளர் குடியிருப்புகளிலிருந்தும் மக்களை ஆகர்ஷித்துக் கவர்ந்திழுத்தது,

பொழுது பலபலவென்று விடிந்தது.

மேகப்படலமற்று நிர்மலமாகத் துலங்கிய கீழ்த்திசை வானத்தில் சூரிய வட்டம் வெதுவெதுப்பு நிறைந்த