பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272


கதிர்களை நீளப் பரப்பி, மங்கம்மாள் சாலையில் கூடி நின்ற மக்களின் உள்ளத்தையும் உடலையும் இதப்படுத்தியது; பட்டினிப் பட்டாளத்தினரை வரவேற்பதற்காகக் கூடி நின்ற அந்த மக்களின் முகத்தில் பிரதிபலித்த உற்சாகத்தையும் ஒளியையும் தானும் பெற்றுப் பிரகாசிப்பதுபோல் சூரிய ஒளி நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகரித்துக் கொண்டிருந்தது.

வாழையிலையில் கட்டி வைக்கப் பெற்ற பூமாலையோடு, மணியும் அவனுடைய தோழர்களும் பட்டினில் பட்டாளத்தினரின் வரவை நிமிஷத்துக்கு நிமிஷம் எதிர்பார்த்து,மரச்செறிவு நிறைந்து கூடாரம் போல் நீண்டு தெரியும் மங்கம்மாள் சாலையில் கண்ணெட்டுத்தொலைவு வரைக்கும் ஏறிட்டுப் பார்த்தவாறு நின்று கொண்டிருந் தார்கள். நேரம் ஆக ஆக, மணியின் மனத்தில் பட்டினிப் பட்டாளத்தினரை வரவேற்கத் துடிக்கும் ஆர்வ உணர்ச்சி மேலோங்கிப் படபடத்தது. இரண்டு நிமிஷங்களுக்கு ஒரு முறை அவன் மனம் 'அவர்கள் ஏன் இன்னும் வரவில்லை?” என்று எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தது. காதலனின் வரவை எண்ணி ஏங்கி, வழி மேல் விழி வைத்து நிற்கும் காதலியின் உள்ளத்தைப் போல், அவன் உள்ளமும். உடலும் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் தூது கொண்டு வரும் பாங்கியையைப் போல், திருப்பரங்குன்றத்திலிருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்த பஸ்ஸின் டிரைவர் காரை நிறுத்தி, "பட்டினிப்பட்டாளத்தார் இன்னும் சிறிதுநேரத்தில் வந்து விடுவார்கள்; பசுமலையை நெருங்கி விட்டார்கள்!" என்று தகவல் சொல்லிவிட்டுச் சென்றார். அந்தச் செய்தியைக் கேட்டதும் மணியின் மனத்தில் எப்படியும் அவர்கள் வந்து விடுவார்கள் என்ற ஆறுதலுணர்ச்சியும், சீக்கிரம் வரமாட்டேன் என்கிறார்களே. என்ற ஆதங்கமும் மாறி மாறிச் சுழன்று அவனது. தவிப்பை அதிகப்படுத்திக் கொண்டிருந்தன.

அந்தப் பட்டினிப்பட்டாளத்தினரை எதிர்கொண்டு அழைக்கப் போவதுபோல், வானத்தில் விரைவாக