பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

279


உண்மையை மட்டும் பரிபூரணமாக உணர்ந்திருந்தார்கள்; பசிப் பிரச்னை இவர்கள் அனைவரையும் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்கச் செய்தது...

அந்தப் படையில் உள்ள ஒரு வயோதிகம் தட்டிய மனிதரைக் கண்டு, "என்னய்யா, நீங்ககூட இந்த வயதிலே இப்படிப் புறப்பட்டு வந்திட்டிங்களே என்று அனுதாபத்தோடும் ஆச்சரியத்தோடும் கேட்டான் மணி.

அந்தக் கிழவர் தந்த பதில் அவனைத் திடுக்கிட வைத்தது.

"ஆறிலும் சாவு, நூறிலும் சாவுதான், தம்பி. ஆனா, எந்தச் சாவானாலும், ஊரிலே கிடந்து கஷ்டப்பட்டு அவச்சாவு சாகக்கூடாது; சாகிறதே சாகிறோம். தல்ல காரியத்துக்காக உயிரைவிட்டோம்னாவது இருக்கட்டுமே!"

விழுந்த வயோதிகரின் உறுதியும், நம்பிக்கையும் மணியின் மனத்தில் சில்லிட்டுப் பரந்தது. அவன் அவரைப் பார்த்துச் சொன்னான்.

"பெரியவரே! நீங்கள் இனிச் சாகவேண்டியதில்லை. வாழ்வதற்குரிய மார்க்கத்தில் வந்து விட்டீர்கள். உங்களைச் சாகடிக்கும்படி நாங்கள் விட்டுக் கொண்டிருக்கமாட்டோம்!”

மனியின் குரலில் உறுதியும், நம்பிக்கையும் பிரதிபலித்தன.

பட்டினிப் பட்டாளத்தினருக்கு ஆதரவாக இன்று மதுரையிலே பல தொழிலாளர்கள் ஊர்வலம் நடத்தினார்கள், பல தொழிற்சங்கங்கள் அவர்களுக்கு ஆதரவாகத் தீர்மானங்கள் நிறைவேற்றின; மாலையில் அவர்களுக்கு ஆதரவாக, ஒரு பொதுக் கூட்டம் நடந்தது. பொதுக் கூட்டத்தில் ராஜுவும், பட்டினிப் பட்டாளத்தின் தலைவரும் பேசினார்கள். பத்தாயிரம் மக்களுக்குக் குறைவில்லாமல் கூடியிருந்த அந்தக் கூட்டம் பட்டினி