பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280


நெசவாளருக்குத் தன் ஆதரவையும் அனுதாபத்தையும் தெரிவித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியது.

மறுநாட் காலையில் பட்டினிப் பட்டாளத்தினர் மதுரையிலிருந்து கிளம்ப ஆயத்தமானார்கள்; மீண்டும் அவர்கள் தமது கோஷங்களைக் கோஷித்துக்கொண்டு நகர வீதிகளைக் கடந்து வடக்கு நோக்கிக் கிளம்பினார்கள்; மதுரை நெசவாளர் சங்க ஊழியர்கள் பலரும் ராஜுவும் மணியும் மதுரை நகர் எல்லைப் புறம் வரையிலும் அவர்களோடு துணை சென்று வழியனுப்பினார்கள்.

பட்டாளத் தலைவர் விடைபெறும் போது "மதுரை மக்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவியுங்கள். அவர்கள் அளித்த ஆதரவுக்கும் உபசரணைக்கும் எங்கள் வந்தனத்தைத் தெரிவியங்கள். நாங்கள் சென்று வருகிறோம்" என்றார்.

ராஜு அவர் கையைப் பிடித்து விடைபெற்றவாறே, அங்கு கூடியிருந்த மக்களை நோக்கிப் பேசினார்; "நீங்கள் வாழவேண்டும் என்ற புனிதப் போரில் ஈடுபட்டிருக்கிறீர்கள். சென்னைக்குச் செல்கின்ற நீங்கள் தொகையில் ஒரு சிலராக இருக்கலாம். ஆனால் உங்களோடு உங்கள் காலடிபட்ட மண்ணிலுள்ள மக்களின் இதயங்களெல்லாம் துணையாக வருகின்றன என்பதை மட்டும் நீங்கள் மறந்து விடாதீர்கள். தீரமாகப் போராடுங்கள். வெற்றி வீரர்களாகத் திரும்பி வாருங்கள்."

பட்டினிப் பட்டாளப் படையினரின் கோஷங்கள் தூர தொலையில் ஒலித்தன. அந்தப் படையினர் கண் மறையும் வரையிலும் மணியும் மற்றவர்களும் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். அவர்களின் கோஷங்களும் உருவங்களும் மறைந்து, அவர்கள் சென்ற திக்கில் எழும்பி தின்ற புழுதி மண்டலம் படிந்து தெளிவுற்ற பிறகும், மணி அந்தத்திசையிலிருந்து கண்களைத் திருப்பாமல் அப்படியே நின்றான். அவன் உள்ளம் ஏதோ ஒரு பார உணர்ச்சிக்கு