பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294


சத்தியாக்கிரகிகளுக்கு வாழ்த்துக்கூறி, அவர்களை வழியனுப்பி வைக்க வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தார்கள்.

கையெழுத்து மறையும் நேரமுமாகி விட்டது; ரயில் இன்னும் இந்த பாடில்லை. ஏழு மணி சுமாருக்குத் திடீரென்று கீழ்த்திசையில் ரயிலின் கீச்சுக்குரல் கேட்டது; தொடர்ந்து ரயிலின் வெளிச்சமும், சப்தமும் அந்த ரயிலில் வரும் தலைவர்களுக்குக் கட்டியம் கூறுவதுபோல் முன்னேறி வந்தன.

வடிவேலு முதலியாரும் மற்றவர்களும் கைகாட்டி மரத்தைத்தாண்டி ரயில் வருவதற்குள்ளாகவே பரபரப்புற்று நிலை கொள்ளாமல் தவித்தார்கள்; நேரம் கழித்து வந்ததற்காக வருந்துவதுபோல் புஸ்புஸ்ஸென்று இரைந்து பெருமூச்சு விட்டுக்கொண் டேஸ்டேஷனில் வந்து நின்றது ரபில்.

ரயில் வந்து நின்றதும் வடிவேலு முதலியாரும் . சங்கரும் ராஜுவைத் தேட முயன்றார்கள். அதற்குள் ரயிலை விட்டு இறங்கிய மணி சங்கரைக் கண்டுகொண்டு, "சங்கர்!” என்று உரக்கக் கூப்பிட்டான்.

குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினான் சங்கர்; அவனெதிரே மணி நின்று கொண்டிருந்தான்,

"மணியா?" சங்கரின் வியப்பு வார்த்தை வடிவில் வெடித்தது.

"மணியேதான்!" என்று தன்னைத்தானே சிரித்துக் கொண்டு அறிமுகப்படுத்தினான் மணி.

சங்கர் அந்தக் கணத்தில் எல்லாவற்றையுமே மறந்துவிட்டான்; ராஜூவைக் கூட மறந்து நின்றான்.

"என்ன சங்கர் விழிக்கிறே?' என்று கேட்டவாறே, ரயிலிலிருந்து இறங்கிய ராஜுவைச் சங்கருக்கு