பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

307


"என்னை மன்னிச்சிடு, அம்மா. ஆனால், நான் அப்படி ஓடிப் போயிருக்காவிட்டால், வீரையாவைச் சந்தித்திருக்க முடியுமா?” என்று கூறித் தன் தாயைச் சமாதானப்படுத்தினான் மணி.

மகனின் சமத்காரமான பதிலைக் கேட்டு, தங்கம் ஏதோ புதுமையைக் கண்டதுபோல் புளகித்து விம்பினாள்.

மணியும் ராஜுவும் குடிசைக்கு வெளியே கிடந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து அங்கு குழுமியிருந்த நெசவாளர்களோடு பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களது கூேமலாபங்களையும், சங்க வேலைகளையும் விசாரித்தார் ராஜு சத்தியாக்கிரகத்தில் யார் யார் பங்கெடுக்கிறார்கள் என்பதை விசாரித்தார். சத்தியாக்கிரகப் போரில் அவர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது பற்றியெல்லாம் அறிவுரைகள் கூறினார்.

புஸ்ஸென்று இரைந்து கொண்டிருந்த பெட்ரோமாக்ஸ் விளக்கின் முன்னிலையில் அமர்ந்து சாவதானமாக வெற்றிலையைத் தட்டிப் போட்டுக் கொண்டிருந்தார் இருளப்பக் கோனார். தன் பிள்ளை அந்த நெசவாளிகளுக்கு அறிவுரை கூறுவதையும் அந்த நெசவாளர்கள் அவற்றைக் கவனத்தோடும் மரியாதையோடும் கேட்பதையும் கண்டு அவரது உள்ளம் கர்வத்தால் நிமிர்ந்தோங்கியது.

சிறிது நேரத்தில் இருளப்பக் கோனாரின் குடிசை முன்னால் சங்கரின் மோரீஸ் மைனர் வந்து நின்றது.

"சங்கரும் வந்துவிட்டான்!" என்றார் வடிவேலும் முதலியார்.

காரைவிட்டு சங்கரும் கமலாவும் பரபரப்போடு இறங்கி வந்தார்கள். கமலா அங்கு கூடியிருந்த மக்களையும் பொருட்படுத்தாமல், "அத்தான்/" என்று கூறிக்கொண்டே ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தாள்; கமலா வருவதைக்