பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

317


இவ்வாறு நான் எழுத உட்காரும் காரியம் எனக்கு ஒரு மகா யக்ஞம் மாதிரி, கையிலே காப்புக் கட்டி, பல நாட்கள் விரதம் காத்து. அக்கினிப்பிரவேசம் செய்து நேர்ந்த கடனை முடிக்கும்பக்தனைப்போலத்தான் நான் அப்போது நடந்து கொள்வேன். அந்த நாட்களில் எனக்கு இரவும் பகலும் ஒன்றுதான். எழுதுவேன்; எழுதித் தள்ளுவேன். அப்போது வேறு எதுவுமே என் கவனத்தைத் திசை திருப்புவதில்லை. அப்போதெல்லாம் நான் பெரும்பாலும் தன்னுள்ளே கானாகத் தனிமையிலேதான் வாழ்வேன். ஆனால், உண்மையில் நான் தனிமையில் வாழ்வதில்லை. ஏனெனில் எனது நாவலில் வரும் பாத்திரங்கள் எல்லாம் (அவை ஓரிடத்திலே தலை காட்டி விட்டு மறைவதுயினும் சரி, அல்லது கதையின் அடிமுடி வரையிலும் நடமாடுபவையாயினும் சரி அவையெல்லாம்) பரிவாரம் போல் என்னுடனேயே இருக்கும். நான் எங்கு சென்றாலும் என்கூடவே அவையும் வரும். அவர்களில் யாரையேனும் அழைத்து, என்னோடு அமர்ந்து வெற்றிலை போடச் சொல்லாதகுறையாக, அத்தனை பேரும் சதையும் ரத்தமும் கொண்ட பிறவிகளாய் என் மனவரங்கில் உலவித் திரிவார்கள். அத்தனை பேருடைய முக பாவனைகள், சாடை மாடைகள், அந்தரங்கங்கள் எல்லாம் எனக்குத் துலாம்பரமாகத் தெரியும். அவர்களையே துணையாகக் கொண்டு நான் நாவலைச் சில தினங்களில் எழுதி முடித்து விடுவேன். அநேகமாக அதே அவசரத்தில் அது அச்சிலும் வந்துவிடும். என்றாலும் முற்றும் போட்டு முடித்துவிட்ட எழுத்துப் பிரதியின் கடைசிப் பக்கத்தைக் காணும்போது எழுகின்ற பெருமிதமும், திருப்தியும், ஆசுவாசமும் அச்சுப் பிரதியைப் பார்க்கும் காலத்தில் என்னில் எழுவதில்லை 'ஈன்று புறந்தரும்' போது காணும் இன்பத்துக்கு எதுவுமே ஈடாவதில்லை.

இந்தரகசியத்தை ஏன் சொல்லவந்தேன் என்றால்