பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

319


நானும் கைலாச முதலியாரின் கொலைக்குக் காரணமான சூழ்நிலையை எண்ணிக் குமைந்தேன். துக்கித்தேன். ஆனால் அந்த நாவல் வெளிவந்த பின்னர் அரசியல்வாதியும் இலக்கிய ரசிகருமான என் நண்பர் ஒருவர், "என் வாழ்க்கையில் நான் ஒரே ஒரு முறைதான் கண்ணீர் விட்டிருக்கிறேன், அதுவும் என் தந்தை இறந்தபோது. கைலாச முதலியாரின் மரணத்தைப் படித்தபோது என் கண்கள் கலங்கிவிட்டன, என் வாழ்வில் இரண்டாம் முறையாகக் கண்ணீர் விட்டேன்" என்று எனக்கு எழுதினார். அதை படித்தபோதுதான் நான் துக்கம் கொண்டாடியதிலும் அர்த்தம் உண்டு என்பது ஊர்ஜிதமாயிற்று.

இதனால் எனது படைப்புக்கள் எல்லாம் அந்தக் கணத்திலேயே கருவுற்று, அந்தக் கணத்திலேயே ரிஷி பிண்டமாக அவதாரம் செய்து விடும் என்று அர்த்தமல்ல. சொல்லப்போனால் நாவல்கள் மட்டுமல்ல, சிறுகதைகளும் கூட என் மனக் குகையில் பல்லாண்டுக் காலம், பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பிறவிப் பேற்றைக் காணாமல்மோனச் சிறையில் தவம் கிடந்த துண்டு கன்னிக் கோழியின் வயிற்றுக்குள்ளேயுள்ள கருக்குலையைப் போல் என் உள்ளத்திலே கதா பாத்திரங்களும், சம்பவங்களும் என்றோ எப்போதோ சுருப் பிடித்து உறங்கும்; வளர்ந்து கொண்டிருக்கும். ஆனால் எந்த நேரத்தில் எந்தக்கரு பூரண வளர்ச்சி பெற்று வெளியுலகத்தைப் பார்க்கும் என்பது எனக்கே தெரியாது. சமயங்களில் சின்னக் கருவே பெரிய கருக்களை முந்திக் கொண்டு வளர்ந்து விடும். இலக்கிய சிருஷ்டியின் பரிணாம விசித்திரம் அப்படி!

'பஞ்சும் பசியும்' சரித்திர நாவல், பத்தாண்டுகளுக்கு முன்னால் நமது நாட்டில் கைத்தறி நெசவாளர்கள் பட்ட அவலத்தையும் அதைப் போக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் சித்திரிக்கும் நாவல். அன்று எல்லோ ரையும் போலவே நானும் மவுண்ட்ரோட் ரவுண்டாணா வாயினும் மங்கம்மாள் சாலையாயினும் எங்கும் எந்தத்