பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


"என்னாலேயா? நான் அப்பவே வந்து நீங்க ரெண்டு பேரும் ரயிலில் இருக்கிறீங்களான்னு பார்த்தேன், பிறகு தான் வெயிட்டிங் ரூமுக்கு வந்தேன். மணி என்ன என்று கூடப் பார்க்காமல் ரெண்டுபேரும் என்ன கோட்டையைக் கட்டிமுடித்தீர்களோ, தெரியலை.கையிலேகடியாரம்கட்டி யிருக்கிறது. அலங்காரத்துக்கா?" என்று பதிலளித்தான் சங்கர்.

மணி பதில் சொல்வதற்கு முந்திக் கொண்டான்; "நாங்க ஒண்ணும் கோட்டையைக் கட்டவும் இல்லை; இடிக்கவும் இல்லை. உன்னைத்தான் . எதிர்பார்த்துக் கிட்டிருந்தோம். நீ என்னவோ ரயில்வே ஸ்டாலில் கிடைக்காத பத்திரிகை மாதிரி, பத்திரிகை வாங்க பஜாருக்குப் புறப்பட்டுப் போயிட்டே"

'"என்ன சொன்னே? ரயில்வே ஸ்டாலிலா?" என்று லேசாகச் சிரித்தான் சங்கர்,"ரயில்வேப்புத்தகக் கடையிலே எனக்கு வேண்டிய பத்திரிகைகள் எதுவும் கிடைக்காதப்பா'. அங்கேஒரே அமெரிக்கக்குப்பை இலக்கியம்தானே குவிஞ்சி கிடக்கு. ரசாபாசமான படங்கள்; ரசாபாசமான தலைப் புக்கள். பார்க்கச் சகிக்கலை. அமெரிக்கா நமது நாட்டை மட்டும் விலைக்கு வாங்க விரும்பவில்லை நமது ஆத்மா வையே விலைக்கு வாங்கப் பார்க்கிறது. தெரிந்ததா?" என்று ஆத்திரத்தோடு சொன்னான் சங்கர்.

"போதும், பிரசங்கத்தை ஆரம்பித்து விடாதே"என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு ரயில் ஜன்னலின் மீது சாய்ந்தான் மணி.சங்கரும்மேற்கொண்டு எதுவும் பேசாமல், வாங்கிவந்த பத்திரிகையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கி னான். கமலாவும், ஜன்னல் விளிம்பின்மீது தலை சாய்த்துக் கொண்டும், எதிர்காற்றில் வரிசை குலைந்து நெற்றியில் விழுந்து உறவாடும் சேசச் சுருள்களை ஒதுக்கி விட்டுக் கொண்டே வெளியே தட்டாமாலை சுற்றிச் சுற்றி மறையும் மரங்களையும் வயல் வெளிகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.