பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324


பெறும் நிகழ்ச்சிகள் அவை. அந்தக் காட்சிகளைப் பிரத்தியட்ச சொரூபமாகச் சொல்லில் வடித்தெடுக்க நான் எவ்வளவு வெறி வேகத்தில் இருந்தேன் என்பது வேறு விஷயம். எனினும் எனது நாவலை விமர்சிக்க நேர்ந்த எழுத்தாளர் ஒருவர் அந்தக் காட்சிகளுக்கான இன்ஸ்பிரேஷனை நான் மாக்ஸிம் கார்க்கியிடமிருந்து பெற்று, அதனைப் பயன் படுத்திக் கொண்டிருப்பதாக வலிந்து குற்றம் சாட்டினார். ஆனால் பாவம், உண்மை அதுவல்ல.

என்னைப் பொறுத்த வரையில் நான் மாணவப் பருவத்திலேயே தேசியப் போராட்டக் காலத்தில் பல ஊர்வலங்களையெல்லாம் உருவாக்கியவன்; அந்த ஊர்வலங்களுக்குத் தலைமை தாங்கியவன்; பங்கெடுத்தவன். அந்தக் காலத்தில் தடியடிப் பிரயோகத்துக்கு இரையான ஊர்வலங்களிலும் கூட ஒன்றி நின்றவன். மேலும் மதுரை நகரிலேயே இரண்டு லட்சம் பேர்கள் கொண்ட பிரம்மாண்டமான ஊர்வலத்தைக்கண்டவன்; களித்தவன். அதன் காந்த சக்திக்கு ஆட்பட்டவன்.'பாரடா என்னோடு பிறந்த பட்டாளம்' என்ற உணர்வைப் பெற்றவன். எனவே அத்தகைய ஊர்வலக் காட்சியைச் சொல்லாட்சித் திறனோடு உருவாக்கும் சந்தர்ப்பத்தைத்தான் எதிர்நோக்கி யிருந்தேன்.

'பஞ்சும் பசியும்' எனக்கு அந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தது. ஏனெனில் எழுத்தாளன் என்பவன் வாழ்க்கையில் பார்வையாளனாக இருக்கக்கூடாது, பங்குதாரனாக இருக்க வேண்டும் என்று கருதுபவன் நான். வாழ்க்கைதான் இலக்கிய கர்த்தாவுக்கு வற்றாத கருவூலம். அதுதான் அவனுக்கு சர்வத்தையும் வழங்குகிறது.

அந்த வாழ்க்கையிலே கலந்து நிற்கத் தெரியாமல் நத்தைமாதிரி தன்னுள்ளே தானாய் உடம்பையும் உள்ளத்தையும் சுருக்கிக் கொள்பவன்தான் ‘இன்ஸ்பிரேஷ