பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31



அந்தக் கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்ல டாக்டருக்கு வாய் வரவில்லை'ம்' என்று வாய்க்குள் முனகியவராய் சிறிது நேரம் சும்மாயிருந்தார். பிறகுசங்கரும் அவரும் பேச்சை அப்படியே விட்டுவிட்டு, வேறு விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தார்கள்; கமலாவும் மணியும் அவர்கள் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந் தார்கள்.

இதற்குள் ரயில் ஆற்றுப்பாலத்தைத் தாண்டி அம்பாசமுத்திர எல்லைக்குள் பிரவேசித்து விட்டது. அம்பாசமுத்திரம் ஸ்டேஷனில் ரயில் நின்றதும் அவர்கள் நால்வரும் கீழிறங்கி வெளியே வந்தார்கள். ஸ்டேஷனுக்கு வெளியே சங்கரையும் கமலாவையும் அழைத்துச் செல்வதற்காக அழகிய பியூக் கார் காத்துக்கொண்டு நின்றது. அவர்கள் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும், தலையில் முண்டாசு கட்டிய ஒரு நபர் மணியை நோக்கி ஓடிவந்தார். அவருக்குச் சுமார் ஐம்பது வயதிருக்கும். வாழ்க்கையில் மிகவும் அடிபட்டு நொந்தவர் என்பதை அந்த மனிதரின் கறுத்துப்பேன உடலும் சுருக்கம் விழுந்து தொய்ந்துபோன சதையும், பாளம் விழுந்துவரிக்கோடுகள் நிறைந்த நெற்றிச் சுருக்கமும் புலப்படுத்தின.

அவரைக்கண்டதும் மணி அவரருகே சென்று, "என்ன இருளப்பக்கோனாரே, எங்கேவந்தீங்க?"என்று அன்புடன் கேட்டான்.

"என்ன தம்பி; அப்பா இந்த வண்டியிலியும் வரலியா? அம்மா பாத்துட்டு வரச் சொன்னாங்க. இன்னிக்கிச் சாயரட்சைக்குள்ளே வாரதாகத்தான் தாக்கல் சொல் லிட்டுப்போனாகளாம்" என்றார் இருளப்பக்கோனார்.

"ஒரு வேளை பஸ்ஸில் வந்தாலும் வரலாம்" என்று கூறி விட்டு மேலே நடந்தான் மணி.

இதற்குள் சங்கர் மணியைக் கூப்பிட்டவாறே, "வாப்பா மணி டாக்டரும் நீயும்‌ வீட்டுக்கு வந்து காப்பி