பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


சாப்பிட்டுட்டுப் போகலாம்" என்றான். சங்கரின் உத்தரவைத் தட்டிக்கழிக்க முடியாது என்று மணிக்குத் தெரியும். எனவே கையிலிருந்த புத்தகங்களை இருளப்பக்கோனாரிடம் கொடுத்து, வீட்டுக்குக் கொண்டு போகச் சொல்லிவிட்டு, காரை நோக்கி நடந்தான் மணி.

சிறிது நேரத்தில் அந்த பியூக் கார் மெல்லிய உறும் லோடு மங்களபவனத்தை நோக்கிப் பறந்துசென்றது.

புழுதி மண்டலத்தைப் பின் தங்க விட்டுவிட்டுச் செல்லும் அந்தக் காரையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தார் இருளப்பக் கோனார். சிறிது நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு, துடிதுடிக்கும் உதடுகள் படபடக்க, அவரது வாய், "என்னவோ இந்தப் புள்ளைக சிநேகம் இன்னிக்கிப்போலே என்னைக்கும். நிலைச்சி நிக்கணும்" என்று தனக்குத்தானே சொல்லி ஆசீர்வதித்தது அதே கணத்தில் அவரது கண்ணிலிருந்து ஒரு சொட்டு சூடு நிறைந்த கண்ணீர்த் துளியும் அவரது கையிலிருந்த புத்தகங்களின் மீது விழுந்து தெறித்தது.


4

சுமார் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது இத்தாலிய 'பாஸிஸ்ட் ஜடாமுனி' அபிவீனியா மீது போர் தொடுப்பதற்கு முன்பு, கைலாச முதலியார் சாதாரணத் தறிகாரராய்த்தான் இருந்தார். ஏதோ முன்னோர்கள் தேடி வைத்துவிட்டுப் போன நாழி ஓடுப்போட்ட சிறு காரை வீடும், இரண்டு மரக்கால் விரைப்பாடும் கொண்ட சாதாரண மத்திய தர வர்க்கத் தொழிலாளியாகத்தான் இருந்தார். அந்தக்காலத்தில் அவர் உள்ளூர் பெரிய முதலாளியான தாதுலிங்கமுதலியாரிடம் நூல் வாங்கி நெய்து கொடுத்து அதற்குரிய கூலியைப் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார். நாளாரம்பத்தில் அவர்