பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


தமது சுய சம்பாத்தியத்தில் வாயை வயிற்றைக்கட்டி மிச்சம் பிடித்ததைக் கொண்டும், வயலை அடமானம் வைத்தும், நாலைந்து தறிகளை வாங்கிப்போட்டுத்தமது இனத்தாரில் சிலரை அதில் வேலைக்குவைத்துக்கொண்டு, நூல் வாங்கிக் கொடுத்து நெய்து சேலை துணிமணியாக்கித் தமது தொழிலை ஓரளவுவிருத்திபண்ணிக்கொண்டார்.

அதற்குப் பின்னால், ஹிட்லரின் பேராசையால் எழுந்த உலக யுத்தம் தொடங்கிய பிறகு, கவனிப்பற்றுக் கிடந்த கைத்தறித்தொழிலுக்குத் திடீரென்ற ஒரு மவுசு ஏற்பட்டுவிட்டது. யுத்தத் தேவையினாலும், ராணுவ விஸ்தரிப்பினாலும், மில் துணிக்கு ஏகப்பட்ட கிராக்கியும், பொதுமக்களிடையே துணிப் பஞ்சமும் ஏற்பட்டது. பகாசுரப்பசிகொண்டயுத்ததேவதைக்கு மில் துணி மட்டும் போதவில்லை. வெளிநாடுகளில் கைத்தறித் துணிக்கும் கிராக்கி அதிகமாயிற்று. இதன் காரணமாகவும், யுத்த காலத்தில் ஏற்பட்டிருந்த பணவீக்கத்தின் காரணமாகவும் கைத்தறி நெசவாளருக்குரிய கூலியும் உயர்ந்தது; கைத்தறித் துணி உற்பத்தியும் அதற்குரிய கிராக்கியும் உயர்ந்தது. பெருநாசச் சீரழிவை உலகத்துச் செல்வங்களுக்கும் மக்களுக்கும் கொண்டு வந்த யுத்தம், லாப வேட்டைக் காரர்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் கொள்கை கொள்கையாகப் பணம் திரட்டிக் கொடுத்தது. பெரு மழையில் அடித்த தூவானம்போல், அந்தச் சூழ்நிலை! கைலாச முதலியார் போன்ற சிறு வியாபாரிகளையும் கைதூக்கி வளர்த்து விட்டது. யுத்த காலத்தில் கிடைத்த அபரிமிதமான வருவாயின்காரணமாக, கைலாசமுதலியார் தாமும் மற்ற வியாபாரிகளைப் போல் நூல் வாங்கி விற்பதற்குலைசென்ஸ் வாங்கினார். அத்துடன் தமது மகன் மணியின் பெயரால் ஒரு மாஸ்டர் வீவர் லைசென்சும் பெற்றார். அதன் மூலமாக, அவர் தாமும் நாலு வியாபாரிகளைப்போல் ஐம்பது அறுபது தறிகளுக்கு நூல் கொடுத்து நெய்து வாங்கி, ஜவுளிக் கொள் முதலும் வியாபாரமும் பண்ணத்தொடங்கினார். அத்துடன் தாதுலிங்கமுதலியார்