பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


வெளிப்பிரகாரத்தில் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு புஸ்ஸென்று இரைந்து கொண்டிருந்தது. சமுக்காள விரிப்பில் உள்ளூர் ஜவளி நூல் வியாபாரிகள் சிலர் உட்கார்ந்திருந்தனர், வடிவேலு முதலியார் கைலாச முதலியாரை உள்ளே அனுப்பி வைத்து விட்டு, மற்ற தறிகாரர்களோடு போய்நின்றுகொண்டார்.

"வாங்க கைலாச முதலியார்வாள். திருச்செந்தூரி லிருந்து எப்ப வந்தீக?" என்று விசாரித்தார் ஒரு வியாபாரி.

“நேத்து ராத்திரியே வந்துட்டேனே" என்று பதிலளித்து விட்டு, 'பெரிய முதலாளியும் வாரதாகச் சொன்னாகளாயில்லே வரலியா?" என்று அர்த்தபாவமற்று நிச்சிந்தையாய்க்கேட்டார்.

அவருக்குயாரோ ஒருவர் பதிலளிக்க முனைவதற்குள் வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

"வந்தாச்சி போலிருக்கே"

பெரிய முதலாளி தாதுலிங்க முதலியாரும், தர்மகர்த்தாமைனர் முதலியாரும், சேர்ந்தாற்போல் உள்ளே வந்தார்கள்; பெரிய முதலாளியைக் கண்டதும் ஒரு சில வியாபாரிகள் மரியாதைக்காக எழுந்து நின்று உட்கார்ந்தார்கள்.

பெரிய முதலாளி என்ற பெயருக்கொப்பத் தாதுலிங்க முதலியார் பூதாகரமான சரீரமும்; அலட்சியம் நிறைந்த பார்வையும் கொண்டு விளங்கினார்.கை விரல்களில் வைர மோதிரங்கள் பளிச்சிட்டு டாலடித்தன. காதிலே கொண்டிக் கடுக்கனின் வைர ஒளி நேரத்துக்கு ஒரு நிறம் காட்டியது, மெல்லிய கிளாஸ்கோமல் துணியால் தொய்வாகக் கட்டிய பட்டத்தாரும், மேலே அணிந்திருந்த தும்பை வெள்ளை நிறமானதொளதொளத்த ஜிப்பாவும், நான்குவிரல் அகலக் கரை கொண்ட ஜரிகை அங்கவஸ்திர விசிறி மடிப்பும் அவரது பெரிய மனுஷத் தன்மையை அளந்து காட்டும் அளவுகோல்களாக விளங்கின. மைனர் முதலியார்வாளின்