பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


சீக்கிரம் ஒப்படைப்பதென்றும் கூட்டத்தார் முடிவு செய்தனர்.

புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்ட கைலாச முதலியார் முருகா' என்று தமக்குத் தாமே கூறிவிட்டு, சபையோரைப் பார்த்து, "எல்லாருமாகச் சேர்ந்து கொடுக்கிற இந்தப் பொறுப்பை என்னாலானமட்டும் கவனிச்சிப் பார்க்கிறேன். அம்மன் பணிக்கு அட்டி சொல்லப்படுமா?" ' என்று அவையடக்கத்தோடு கூறிக்கொண்டார்.

பின்னர் கோயிலுக்குப் பூஜை செய்யும் ஓதுவார். மூர்த்தி அம்மனுக்குத் தீபாராதனை காட்டிவிட்டு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் விபூதிப் பிரசாதம் வழங்கினார். விபூதிப் பிரசாதத்தை வாங்கி நெற்றியில் தரித்தவாறே கூட்டத்தினர் கலைந்து சென்றனர். மைனர் முதலியார் கோயிலைவிட்டு வெளியேறும் வரையிலும் வாபோட் திறக்கவில்லை. ஒன்றும் பேசாமல், பெரிய முதலாளியுடன் சென்று அவரது காரில் ஏறிக்கொண்டார்.

இரட்டைக்குழல் ஹார்னை உறுமிவிட்டு, அந்தபியூக் கார்தெருமூலையைக் கடந்து திரும்பியது.அப்போதுதான் டைனர் முதலியார் தம் திருவாயை மலரச் செய்தார் .

"பாத்தியளா. அண்ணாச்சி, உங்க பேச்சுக்குக்கூட மதிப்பில்லாமப் போச்சி எல்லாம் அந்தக் கைலாசம் கைவரிசைதான். இன்னிக்கி ஊர் விவகாரத்திலே தறிகாரங்களையெல்லாம் ஒண்ணு திரட்டிக்கிட்டு நினைச்சதைச் சாதிக்கிறவன், நாளைக்கு நம்ம வியாபார விசயத்திலேயும். இந்த மாதிரி ஏதாவது பண்ண மாட்டான்னு என்ன நிச்சயம்" ?

தாதுலிங்க முதலியாரிடமிருந்து இந்தக் கேள்விக்கு உடனே பதில் வந்து விடவில்லை. சில விநாடிகள் கழித்து அவர் சொன்னார்: