பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44


"தம்பி, கைலாசம் நான் வளர்த்து விட்ட பயிர்; வளர்த்து விடத் தெரிஞ்சமாதிரி, அதைச் சாகடிக்கவும் எனக்கு வழி தெரியும். அந்தக் கவலையை விடுங்க."

தாதுலிங்க முதலியாரின் வர்ம மொழியைக் கேட்ட பின்னர்தான் மைனர் முதலியாருக்கு ஆசுவாசமாக மூச்சு வந்தது.


5

'மங்கள பவனம்'_

மங்கள பவனம் என்ற சொல் தாதுலிங்கமுதலியாரின் வீட்டைப் பொறுத்தவரை காரணப் பெயர் என்று தான் சொல்லவேண்டும். தாதுலிங்க முதலியாரின் வீட்டை அப்படி அழைப்பது உயர்வு நவிற்சியாகி விட்டது. ஒர் அடுக்கு மாடிகொண்ட புதிய காரை வீடுதான் மங்கள பவளம்; எனினும் சுற்றுப்புறத்திலுள்ள பொட்டல் வெளியும், அக்கம் பக்கத்திலுள்ள தணிந்தமட்டப்பா, கூரைச் சாய்ப்பு வீடுகளும், மங்கள பவனத்தைத் தன்னிகரில்லாத் தலைவன் போல் ராஜகம்பீரத்துடன் காட்சி அளிக்க இடம் கொடுத்தன:வீட்டுக்கு முன் முகப்பில் போர்டிகோ;போர்டிகோவின் இருபக்கங்களிலும் வீட்டின் ராஜ கம்பீரத்துக்குக் கவரி வீசுவது போல இரண்டு விசிறி வாழைக் கன்றுகள்; போர்டிகோவிலிருந்து வெளிவாசல் நோக்கிச் செம்மண் சரலிட்டுப் பரப்பிய பாதை நடை பாவாடை விரித்ததுபோல் அழகு தந்தது. அந்தப் பாதையின் இருமருங்கிலும், போர்டிகோ - அருகிலும், கத்தரித்து விடப்பட்ட பச்சைப் - புதர்ச்செடிகளும் ; பால்ஸன், மேரி கோல்டு, கிரிஸாந்தம் முதலிய அன்னிய நாட்டுப் பூஞ்செடி கொடி வகைகளும் அலங்காரமாகக் குளுமை தந்து கொண்டிருந்தன.