பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46


பணக்காரர் என்றால் அவரது மூதாதையர்களில் எவரும் ராஜா வீட்டுக்குழந்தையாக, ஒருராஜ்யத்துக்கு வாரிசாகப் பிறந்து விடவில்லை. நாலைந்து தலைமுறைகளுக்கு முன்பு, ரூபாய்க்கு எட்டுப்படி பத்துப்படி அரிசி விற்ற அந்தக் காலத்தில், தாதுலிங்க முதலியாரின் மூதாதையர்கள் செயலுள்ள மத்தியதரவர்க்கத்தாராகத்தான் இருந்தார்கள். எனினும், அந்த மூதாதையர்கள் தம்மிடமிருந்த பணத்தை பூதம் காத்த புதையலைப் போல் பெட்டிக்குள் பூட்டி வைக்காமல், அந்தப்பணத்தை, தொழிலில் முதலீடு செய்து குட்டி போடச் செய்யும் பொருளாதார வித்தையில் தாதுலிங்க முதலியார் தான் தமது மூதாதையரையெல்லாம் விட, சிறந்தவராகவும் கெட்டிக்காரராகவும் விளங்கினார். மேலும், அவரது மூதாதையர்களின் காலத்தில் அவர்கள் தாது வருஷப் பஞ்சத்தின் அக விலையைப் பயன் , படுத்தித்தான் ஏதோ கொஞ்சம் சொத்தைப் பெருக்க முடிந்ததே தவிர, யுத்த காலக் காண்ட்ராக்ட்கள், கள்ள மார்க்கெட், ஸ்டாக் எக்ஸ்சேஞ்சு, சூதாட்டம் போன்ற அட்டமாசித்திகளைக்கையாண்டுபெருஞ்செல்வம்திரட்ட முடியவில்லை. ஆனால் தாதுலிங்க முதலியாரோ இந்த வித்தைகளிலெல்லாம் கை வந்த சித்த புருஷராக விளங்கினார். அதன் காரணமாக, அவர் பஞ்சு நூல் ஜவுளி வியாபாரம், வீரவநல்லூர் அருகிலுள்ள உள்ளூர் முதலாளிகளின் டெக்ஸ்டைல் மில், மேற்கு மலையிலுள்ள தேயிலை எஸ்டேட், உள்ளூர் முதலாளிகள் தொடங்கிய ஒரு பாங்கியில் டைரக்டர் பங்குத் தொகை முதலீடு முதலிய - பற்பல துறைகளிலும் பணத்தை விதைத்து முறையாகக் கண்டு முதல் பெற்று வந்தார்; அத்துடன் தர்மாம்பாளை அவர் தொட்டுத் தாலி கட்டிய புண்ணியத்தால், அவருக்கு 'கொள்ளி முடித்த சொத்து' என்ற சௌபாக்கிய சித்தியும் கிட்டியது. -

திருமதி தர்மாம்பாள் செயலுள்ள குடும்பத்திலே பிறந்து செயலுள்ள குடும்பத்திலே வாழ்க்கைப்பட்டு, வாழ்க்கை யின் மேடு பள்ளங்களை அறியாது, இருந்து