பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48


அம்பலப்படுத்தி விடக்கூடிய ஆசாமியாகவும் இருந்தான். இஷ்விதக் காரணங்களால் தாதுலிங்க முதலியார் தம் மகனைப் பற்றி எப்போதும் சந்தேகாஸ்பதமான கண்ணோட்டம்தான் கொண்டிருந்தார்.

அன்றுகாலை ஒன்பது மணி இருக்கலாம்.

மங்கள பவனத்தின் போர்டிகோவில் ஒரு மோரிஸ் மைனர் கார் நின்று கொண்டிருந்தது. போர்டிகோவை அடுத்து வீட்டின் இடது புறத்திலுள்ள தாதுலிங்க முதலியாரின் காரியாலயத்தில் தாதுலிங்க முதலியார் வருமானவரி ஆபீசிலிருந்து வந்திருந்தாருகுமாஸ்தாவிடம் ஏதோ தணிந்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்.

"அப்பா!"

வாசல் நடையில் வந்து நின்று குரல் கொடுத்த சங்கரின் பக்கம் திரும்பினார் முதலியார்.

"என்ன ?"

“நாங்க இன்னிக்கி நம்ம எஸ்டேட் பக்கம் பிக்னிக் போயிட்டு வரப்போறோம்."

"நாங்கன்னா யாரு?” என்று சந்தேக பாவத்துடன் கேட்டார் தந்தை.

"நான், கமலா, மணி என்று சுருக்கமாகப் பதிலளித்தான் சங்கர்.

"ஏண்டாவயசுப்பெண்ணை எங்கேயெல்லாம் இழுத் தடிக்கிறது? ம்.போ போ. ஜாக்கிரதையாய்ப் போயிட்டு வா. அது சரி மணியும் வர்ரானா? அவன் எதுக்கு..?"

துணைக்கு!” என்று இடைமறித்துப்பதில் கூறினான்

தாதுலிங்க முதலியாரின் முகம் சட்டென்ற விகாரம் பெற்றது. எனினும் ஒன்றும் சொல்லவில்லை. இரண்டு