பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52


கமலா அதற்கும் பதில் சொல்லவில்லை.

சங்கர் மேலும் கேட்டான்:

"பதில் சொல்லு, கமலா. தங்கள் வாழ்க்கையையே பாதிக்கக்கூடிய இந்த ஜீவாதாரமான கேள்விக்குப் பதில் சொல்லத் தைரியமில்லாமல், நம்நாட்டில் எத்தனை பெண்கள் தங்கள் வாழ்க்கையைப்பாழாக்கியிருக்கிறார்கள். தெரியுமா? இதிலெல்லாம்..."

சங்கரை மேலும் பேசவிடவில்லைகமலா.

"சரி, அண்ணா " என்று கூறிவிட்டுக் கமலா தலை நிமிர்ந்தாள்.

"அப்படிச் சொல்லு"என்றுபரிகாசமும் மகிழ்ச்சியும் கலந்த குரலில் பதில் சொல்லிவிட்டு, "சரிகமலா, நீ போய்க் காரில் சாமான்களையெல்லாம் எடுத்து வைக்க ஏற்பாடு செய். புறப்படு" என்று கூறி வழியனுப்பினான்.

சிறிது நேரத்தில் மங்களபவனத்தின் போர்டிகோவில் நின்ற மோரிஸ் மைனர் இடம்விட்டுப் பெயர்த்து வெளி வந்தது;சங்கர் தான் காரை ஓட்டிக்கொண்டுவந்தான். கமலா பின்வீட்டில் குதூகலத்தோடு உட்கார்ந்திருந்தாள். புறப்பட்டதும் தெரியாமல், நின்றதும் தெரியாமல் கார் சில நிமிஷத்தில், கைலாச முதலியாரின் வீட்டு முன் வந்து நின்று, தாளலயத்தோடுஹார்ன் செய்தது.

"அண்ணாச்சி, கார் வந்துவிட்டுது, புப்பாய்ங் புப்பாய்ங்!" என்று கத்திக்கொண்டு, வீட்டுக்குள் ஓடிச் சென்றான், வாசலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஆறுமுகம்.சங்கரும்கமலாவும் காரைவிட்டு இறங்கி உள்ளே வத்தார்கள்,

"வாம்மா, கமலா" என்று பரிவோடு வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள் தங்கம்.

கூடத்தில் ஒட்டடை அடித்துக்கொண்டிருந்த