பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்நூலை செக் மொழியில் மொழிபெயர்த்துள்ளார். அந்நாட்டின் தலைநகரான பிராகில் உள்ள பிராஸ் பதிப்பகம் இம் மொழி பெயர்ப்பின் முதற்பதிப்பை 1957ல் வெளியிட்டது; இம் முதற்பதிப்பின் அரைலட்சம் பிரதிகளும் அந்நாட்டில் சில நாட்களிலேயே விற்றுத் தீர்ந்தன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நம் நாட்டுக் கைத்தறி நெசவாளர்களை உலுக்கிக் குலுக்கி வந்த ஒரு பிரச்சினையைக் கருவாகக்கொண்டு, ஆசிரியர் ரகுநாதன் எழுதி வெளியிட்ட இந் நாவல், பல பதிப்புகளைக்கண்டு இன்றும் ஜீவசக்திமிகுந்த படைப்பாக விளங்கி வருகிறது. இந்நாவலில் வரும் பாத்திரங்கள் யாவும் நம்மத்தியில் நடமாடிய, நடமாடும் பாத்திரங்கள். ஆசிரியர் ரகுநாதனின் உயிர்த்துடிப்பு மிக்க பாத்திரப் படைப்பாலும், வைரம் பாய்ந்த சொல்லாட்சியாலும், வாழ்க்கையின் எதார்த்தமான பிரதிபலிப்பாலும் தத்துவ தரிசனத்தாலும் இந்நாவல் இலக்கிய ரசிகர்களை ஈர்ப்பதாகவும், விமர்சகர்களும் ஆராய்ச்சியாளர்களும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய கருவூலமாகவும் விளங்கி வருகிறது என்றால் மிகையாகாது. எனவே இந்நாவலைப் பல்கலைக்கழகங்களிலும் தன்னாட்சிக் கல்லூரிகளிலும் நாவல் இலக்கியத்திற்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்நாவலை எமது பதிப்பகம் ஏழாம் பதிப்பாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.


பதிப்பகத்தார்.