பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54


தங்கம்மாள் ஆழ்ந்த பெருமூச்சு விட்டுவிட்டு, வாய்விட்டுத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்:

"அழகான பெண்; அடக்கமான பெண். மணிக்குக் கொடுத்துவைக்கணும்!"

அவள் மீண்டும் பெருமூச்செறிந்தாள்.

"சாமி வரங் கொடுத்தாலும், பூசாரி தட்டிப் பறிக்காமல் இருக்கணுமே. பெரிய முதலியார் குணம் உங்களுக்கு தெரியாதாம்மா?" என்று கரகரக்கும் குரலில் பதில் சொன்னார் இருளப்பக் கோனார்.

இருளப்பக் கோனாரும் ஏனோ ஆழ்ந்த பெரு மூச்செறிந்தார்.

தெருவில் நின்ற காரை 'ஸ்டார்ட்' எடுத்துக் சொண்டே. சங்கர் மணியை நோக்கிக் கேட்டான்: "என்ன மணி, கோனார் ஏன் வரமாட்டார்?"

"அவர் கதைபெரியகதை."

"என்னது?சொல்லேன்"

“இருக்கு. சொல்றேன்" என்று அழுத்திக் கூறினான் மணி

"சரி" என்று கூறிவிட்டு, காரை ஓட்டத் தொடங்கினான் சங்கர். சிறிது தூரம் சென்றதும், சங்கர் மணியைப் பார்த்து, நானும் உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும்" என்றான்.

"என்னது? சொல்லேன்."

"இருக்கு: சொல்றேன்" என்று மணியைப் போலவே அழுத்தலாகப்பதில் கூறினான் சங்கர்.

சங்கர் குறிப்பிடும் விஷயத்தை உணர்ந்துகொண்ட கமலா, எதுவுமே அறியாதவள் மாதிரி கன்றிச் சிவந்த