பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55


கன்னங்களோடு தலையைக் குனிந்துகொண்டாள். முன் வீட்டிலிருந்தசங்கரும்மணியும் அதைக்கண்டுகொள்ளவே வழியில்லை.

6

வடிவேலுமுதலியாரும் அவரையொத்ததறிகாரர்கள் சிலரும் 'தனலக்ஷ்மி ஸ்டோரி'ன் வெளிக் கிராதி கேட்டைக் கடந்து உள்ளே நுழைந்தார்கள் 'தனலக்ஷ்மி ஸ்டோர்ஸ்- கைத்தறி அண்டு நூல் ஜவுளி மொத்த வியாபாரம்' என்று விலாசமிட்ட எனாமல் போர்டு மாட்டப் பெற்ற அந்தக் கடை-மாஜி ராவ்சாகிபும், பரம்பரைப் பெரிய முதலாளியுமானதாதுலிங்க முதலியாரின் கிட்டங்கி அந்தக் கிட்டங்கியில் மூன்று குமாஸ்தாக்களும், ஏழெட்டு எடுபிடி ஆட்களும் வேலை பார்த்து வந்தார்கள்; கிட்டங்கிக்குப் பின்புறம் சிறிது தள்ளி, தாதுலிங்க முதலியாருக்குச் சொந்தமான சாயப் பட்டறை ஒன்றும் இருந்தது. சாயப் பட்டறை வெளித்தோற்றத்துக்கு லகுவில் புலப்படாவிட்டாலும், துர்க்கந்தம் வீசும் அந்தப்பட்டறையின் நெடி நாற்றம் மட்டும், மெயின்ரோடு வரையிலும் வியாபித்து நின்று, தாதுலிங்க முதலியாரின் பெருமையை நிலைநாட்டிக் கொண்டிருந்தது. தனலஷ்மி ஸ்டோர்ஸ் கிட்டங்கியிலிருந்துதான் தறிகாரர்களுக்குநெய்வதற்கு நூல் கொடுத்து வாங்குவதும், உள்ளூர்ச் சில்லரை வியாபாரிகளுக்கும், நூல், ஜவுளி முதலியன கொடுக்கல் வாங்கல் செய்வதும் வாடிக்கை. தனலஷ்மி ஸ்டோர்ஸ் ஒன்றுதான் ஊரும் உலகமும் அறிந்த, தெரிந்த கிட்டங்கி: இது தவிர, தாதுலிங்க முதலியாருக்கு வேறு சில கிட்டங்கிகளும் உண்டு. அந்தக் கிட்டங்கிகள் தாதுலிங்க முதலியாருக்கும் அவரது அந்தரங்கமான அடியாட்கள் சிலருக்கும் தெரியுமேதவிர, சாதாரணத்தறிகாரர்களுக்கோ, வருமானவரி, விற்பனை வரிச் சிப்பந்திகள் முதலியோருக்கோ தெரியாத விஷயங்கள்.