பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64




அதற்குக் காரணம்? அது ஒரு வரியில் சொல்லி முடிக்கக்கூடியதல்ல!

'என்னமோ அம்மன் சோதிக்கிறாள்!" என்று, 'கிரக சாரம் சரியில்லை, எட்டாமிடத்தை விட்டு சனி பகவான் இடம்பெயருகிறவரை இந்த இழுபறிதான்' என்றும், அவ்வப்போது கைலாச முதலியார் தமக்குத் தாமே கூறி ஆறுதல் தேட்டிக் கொண்ட போதிலும், அவருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு லோகநாயகி அம்மனையோ, செந்தூர் முருகனையோ, அட்டமத்துச்சனீசுவரனையோகுற்றம் கூற வழியில்லை. ஏனெனில், அந்தச் சிரமம் கைலாச முதலியாருக்கு மட்டும் வந்த சிரமம் அல்ல; கைத்தறித் தொழிலை நடத்தியும் நம்பியும் வந்த லட்சோப லட்ச மக்களுக்கும் ஏற்பட்ட பொது நெருக்கடி அது. ஆகஸ்ட் சுதந்திரம் தந்த 'சுயராஜ்யப் பரிசு'அது.

ஆனால், ஆகஸ்ட் சுதந்திரத்தின் அபிநவ கலி புருஷர்களின் 'அருமை பெருமைகளை' யெல்லாம் கைலாச முதலியாரோ, அவரைப் போன்ற சிறு வியாபாரிகளோ, வடிவேலு முதலியார் போன்ற தறிகாரர்களோ தெரிந்துகொள்ளவில்லை. எனவே தான் அவர்களுக்குத் தமது சிரமங்களுக்குரிய காரணம் புரியாத புதிராக இருந்தது. "என்னமோசுயராச்சியம் வந்துவிட்டது என்றார்கள். நம்ம நேருதான் பிரதம மந்திரி, நம்ம கொடிதான் பறக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால், சுயராச்சியம் வந்த பிறகு மனுஷனுக்கு உள்ள சுகத்துக்கும்கூட அல்லவா கொள்ளை வந்துவிட்டது. இதுதான் சுயராச்சியமா? நல்ல சுயராச்சியம்!" என்றுதான் அவர்கள் அதிசயப்பட்டார்கள்; சலித்துக் கொண்டார்கள்...

'அமெரிக்கப் பஞ்சின் விலையேற்றம் என் மென்னியைப் பிடிக்கிறது! நான் மில்லை மூடிவிடப் போகிறேன்' என்று பம்மாத்துப் பண்ணிய விக்கிரமசிங்கபுர வெள்ளையனைக் காங்கிரஸ் ஆட்சியின் கருணாமூர்த்திகள்