பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65


 தாங்கித் தடுத்து, ஒரு கோடி ரூபாயை மானியமாகத் தஷிணை வைத்து வாழி பாடி வாழ்த்திய விவரத்தையும் அந்த அப்பாவி மக்கள் தெரிந்து கொள்ளவில்லை.

"என்னமோயுத்தகாலத்தில் ஒருதட்டுத்தட்டினோம் யுத்தம் முடிந்த பிறகும் அதே நிலைமை இருக்குமா?" என்று ஒரு சிலர் புத்திக்குத் தட்டுப்பட்ட அளவில் சமாதானம் தேடிக்கொண்ட போதிலும்கூட, பிரத்தியட்சமான வியாபார நிலைமை அந்தச் சமாதானத்தையும் கூடத் தகர்த்து வந்தது. 'யுத்த காலத்தில் உள்ள நிலைமைதான் இல்லாது போகட்டும் யுத்தத்துக்கு முந்திய நிலைமையாவது இருக்க வேண்டாமா? இப்போது நிலைமை படுகேவலமாகவல்லா இருக்கிறது?" என்று சிந்திக்கும் வேளையில்தான் அவர்கள் எந்தவிதச் சமாதானமும் காணமுடியாமல் தவித்தார்கள்.

யுத்தத்துக்கு முன்போ? யுத்தத்துக்கு முன்பு இந்த நாட்டின் கைத்தறித் துணியில் கிட்டத்தட்டப் பேர்பாதி அளவு அக்கரைச் சீமைகளுக்கு ஏற்றுமதியாகி வந்தது. அக்கரைச்சீமைகளானரங்கனிலும் சிங்கப்பூரிலும் இந்திய நாட்டுக் கைத்தறித் துணிக்கு நல்ல கிராக்கி யுத்த காலத்தில் இந்தச் சீமைகளுக்கு ஏற்றுமதி அதிகரித்ததோடு மட்டுமல்ல, உள் நாட்டிலும் கைத்தறித் துணிக்கு நல்ல கிராக்கி; நல்ல விலை. கைத்தறி நெசவாளருக்கும் வியாபாரிகளுக்கும் இதனால் சக்கைப்போடு; கவலையே கிடையாது. ஆனால், காருண்யம் மிகுந்த காங்கிரஸ் ஆட்சி வந்த பிறகு, வெளிநாட்டு ஏற்றுமதிக்கு 'அட்டமத்துச் சனி' பிடித்தது; ஏற்றுமதி தடை செய்யப்பட்டது; கொஞ்ச நஞ்சம் ஏற்றுமதியாகும் துணிக்கும் ஸ்பெஷல் வரி விதிக்கப்பட்டது. உள் நாட்டிலோ? உள் நாட்டில் நாளுக்கு நாள் மக்களுடையவரும்படிசுருங்கியது; யுத்தகாலத்தைப்போல் முரமுரக்கும் புது நோட்டுக்கள் காணப்படவில்லை. ஆனால், பொருள்களின் விலைவாசிகள் மட்டும் கொம்பேறி மூக்கனைப்போல் உச்சிக்கொம்பை விட்டு இறங்கவே