பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73


"இவ்வளவு ஸ்ட்ரிக்ட் வாலுவேஷன் கூடாதப்பா, நாமும் எவ்வளவு பணத்தைச் செலவழிச்சி, மூச்சைத் தொலைச்சிப் படிச்சித் தொலைக்கிறோம். அப்படிப் படிச்சும் இத்தனைப் பேரைப் பெயிலாக்கினா?" என்று அங்கலாய்த்தான் ஒருமாணவன்.

இதற்குள் சங்கரும் அவர்கள் பேச்சில் கலந்துகொள்ள முன்வந்தான்.

"என்னப்பா, விவரம் தெரியாமல் பேசுறியே?இப்பவே வேலையில்லாத் திண்டாட்டம் ஜாஸ்தியா இருக்கு. இன்னும் நிறைய பேரைப் பாஸ் பண்ணவிட்டா, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்காதா? எல்லாத்தையும் பாஸ் பண்ணவிட்டுட்டு, அப்புறம் வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகப்படுத்துறதற்கு நம்ம சர்க்காருக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு" என்றான் சங்கர்.

"பாஸ் பண்ணுறது கிடக்கட்டுமப்பா. நாம எவ்வளவுதான் முட்டி மோதிப்படிச்சாலும், சமயத்திலே பரீட்சைப் பேப்பரே 'அவுட்' ஆயிடறது. அப்புறம் திரும்பவும் வையடா பாரீட்சைன்னு வாணாளை வாங்குறது. நல்ல பரீட்சை" என்று சலித்துக் கொண்டான் வேறொருவன்.

"பரீட்சை பேப்பர் அவுட்டாவதைச் சொல்ல வந்துட்டியே, பட்ஜெட் ரகசியங்களே சந்தி சிரிக்குது!" என்று குறுக்கிட்டான் சங்கர்.

"நம்ம பாடுகூடப் பரவாயில்லை. என்னமோ மார்ச்-செப்டம்பர்-மார்ச் என்றாவது கரையேறி விடலாம் ஆனால்,ஹைஸ்கூலைச்சொல்லு ஸெலக்ஷன்னு ஒண்ணை வச்சி, ஒண்ணுக்குப் பாதியை வடிகட்டி அனுப்புறாங்க. அப்படி அனுப்பியும் பாதிக்கு மேலே பாஸாகலைன்னா, அர்த்தம் என்ன?" என்று கேட்டான் ஒருவன்.

"ஆறாவது பாரத்திலே படிக்க லாய்க்குன்னுதானே அஞ்சாவது பாரத்திலே பாஸ் பண்ணிவிடுதாங்க. அப்புறம்,