பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76


அன்னிக்கு அவள் என்னமாப் பேசினாள் தெரியுமா? அவருக்குப் பரிசு கிடைத்ததிலே ஒண்ணும் ஆச்சரிய மில்லை" என்று கூறினான் இன்னொருவன்.

கமலாவைப்பற்றிய இந்தப்புகழுரையைக்கேட்டதும் . மணியின் உள்ளம் குதூகலம் அடைந்து விம்மி நிமிர்ந்தது. அவன் முகத்தில் புன்னகையும் பூரிப்பும் அரும்பிமலர்ந்தன. இருளில் எவரும் அவனுடைய உணர்ச்சிப் பரவசத்தைப் கண்டு கொள்ளவில்லை. உடன் வந்த மாணவர்கள் பலரும் கமலாவின் அழகையும் திறமையையும் பற்றிப் பேசிக் கொண்டு வருவதைக் கேட்கக் கேட்க மணியின் உள்ளம் பெருமிதத்தால் இறுமாப்பு அடைந்தது.

அந்தஉணர்ச்சிப்பரவசத்தால் அவனால் அதிகநேரம் ஊமையாக இருக்க முடியவில்லை; திடீரென்று மணி வாய் திறந்தான்; "என்னப்பா, இவ்வளவு அழகும் திறமையும் உள்ள கமலாவைக் கல்யாணம் பண்ணினால்...

மணியின் இந்தப் பேச்சை, கூடவந்த மாணவர்களின் திடீர்ச் சிரிப்பும், கலகலப்பும் இடையில் முறித்துவிட்டன,

"அடடே! மணி! நீ அதற்குள் கல்யாணத்திற்குப் பிளான் போட்டுவிட்டாயா?"என்று கேலியாகக் கேட்டான் ஒருமாணவன்.

"அட, 'சரிதாம்பா இப்படிப்பட்ட பெண்ணைக் கட்டிக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தால், எவன்தான் வேண்டாம் என்பான்?" என்றது ஒரு குரல்.

"கொடுத்து வெக்கணும்பாரு!"என்றதுமறுகுரல்.

"நீ சொன்னே பாரு. அது நூத்திலே ஒரு வார்த்தை, கொடுத்துதான் வைக்கணும். ஆனா சும்மா உன்னையும் என்னைம் போலுள்ள வெள்ளை வேட்டிப் பண்டாரங்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்குமா? தாதுலிங்க முதலியார் பலேபேர்வழி. அவர் அவளுக்கு எந்த லட்சாதிபதி வீட்டில் சம்பந்தம் பேசுகிறாரோ!" என்று ஆரம்பித்தான் வேறொரு மாணவன்.