பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78


"அது சரி, எதுக்கு இந்த வெட்டிப் பேச்சு? நடக்கிற காரியத்தைப் பேசுங்கள்!" என்றான் இன்னொரு மாணவன்.

"அது நடக்கிற காரியம்தான்!" என்று சொல்ல வேண்டுமென்று மணியின் ஆசையுள்ளம் துடித்தது. எனினும் அந்த வார்த்தையை இனந்தெரியாத பயமும் கலக்கமும் பிறக்க விடாமல் தடை செய்தன. மணி ஒன்றுமே பேசாது அவர்களோடு நடந்து வந்தான்; அதற்குள் லோகநாயகி அம்மன் சந்நிதி வந்துவிட்டதால் மணி மற்ற மாணவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு வீட்டை நோக்கித் திரும்பினான்.

தன்னந் தனியனாகவரும் போதுதான் அவனது பணத்தை எண்ணற்ற கேள்விகளும் சந்தேகங்களும் வியூகமிட்டு வளைத்தன. அந்த மாணவர்கள். கமலாவைப்பற்றி ஏன் தான் பேசினார்களோ என்றிருந்தது அவனுக்கு. அனதவிட, தான் ஏன் இந்தக் கலியாணப் பேச்சை எடுத்தோம் என்று நைந்தது அவன் உள்ளம். அவன் எவ்வளவுதான் சிந்தனையைத் திசை மாற்றி, அதை மறக்க முயன்றாலும், "எந்த லட்சாதிபதி வீட்டிலோ-?" என்ற அந்த வார்த்தைகள் அவன் மனதில் வல்லீட்டிபோல் பாய்ந்து குத்தி, இல்லாத சந்தேகங்களையெல்லாம் எழுப்பிக் கொண்டிருந்தன.


9

இருட்டிஎட்டுநாழிகை நேரம் இருக்கலாம்.

ஊருக்கு மேல்கோடியிலுள்ள தமது குடிசைக்கு வெளியே கிடந்தகயிற்றுக்கட்டிலின்மீது அமர்ந்து, கட்டில் காலின்மீது வெற்றிலை உரலை வைத்து லொட்டு லொட்டென்று இடித்துக் கொண்டிருந்தார் இருளப்பக்சோனார். -