பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80


தோற்றமளித்தாள். அள்ளி முடிந்திருந்த தலைமயிரில் நாரத்தங்காய் மாதிரி சுருக்கம் விழுந்து சொரசொரத்துப் போயிருந்த அவளது முகத்தின் விகாரத்தோற்றம், பாம்படமில்லாது தொனதொனத்துத் தொங்கிக் கொண்டிருந்த ஓட்டைக்காதுகளால் மேலும் விகாரமாகத் தோற்றமளித்தது. அவள் படுத்தியிருந்த சுங்கடிப் புடவை அவளுடைய மெலிந்து வாடிய உடம்பின் மீது சுமத்திய பெரும்பாரம்போல் தோற்றியது. கழுத்தில் கிடந்தகறுப்புத் கயிற்றில் சின்னஞ்சிறு பிள்ளையார் தாலி மட்டும் மறைவாகக் கிடந்தது. அந்தத் தாவியைத் தவிர, அவள் கட்டம்பல் அரை மஞ்சாடி தங்கமோ வெள்ளியோ கூட இல்லை.

"ஏளா மாரி, மாட்டுக்குப் பருத்திக்கொட்டை ஆட்டி வச்சியா?"என்று சோர்ந்துபோய் நிர்விசாரமாகக்கேட்டார் கோனார்.

"வச்சேனே" என்று சொல்லிக்கொண்டே, கயிற்றுக் கட்டிலின் அருகில் உட்கார வந்தாள் மாரி.

அதற்குள் இருளப்பக் கோனார், "ஏளா, வீட்டுக் குள்ளே மாடக்குழிலே ஒரு போயிலைக் காம்பு போட்டு வச்ச ஞாபகம். கிடந்தா எடுத்துக்கிட்டு வா" என்று உத்தர விட்டார்.

"சாப்பிட வேண்டாமா?" என்று கரிசனையோடு கேட்டாள்மாரி.

"இங்கேமனுசனுக்கு இருக்கிற கவலையிலே சாப்பாடு ஒண்ணுதான் குறைச்சல். சரி, அது கிடக்கு. கொஞ்ச நேரம் ஆகட்டும். நீ போயிலையை எடுத்துக்கிட்டு வா."

மாரி எழுந்து குடிசைக்குள் சென்றாள்.

இருளப்பக் கோனார் வெற்றிலை உரலை இடிக்கத் தொடங்கினார்.