பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81




'கவலை, கவலை. ஆயுசுக் காலம் பூராவும் கவலை. இந்தக் கவலைக்கு. என்னிக்கித்தான் விடிவுகாலம் வரப் போவுதோ, இந்தக் கட்டை பூமியிலே சாவிற அன்னிக்கித்தானா-?'

இருளப்பக் கோனாரின் சிந்தனைக்குப் பின்னணி இசைப்பது போல, உரலில் குழவி இடிபடும் சப்தம் தாள லயத்தோடு ஒலித்துக் கொண்டிருந்தது.

இன்னிக்கி நேத்து ஏற்பட்ட கவலையா.?" - .

இருளப்பக் கோனாரின் மனம் எத்தனை எத்தனையோ ஆண்டுகளையும்பிரதேசங்களையும்தாண்டி, பின்னால் சென்றது...

அப்போது அவர் சிவகிரியில் இருந்தார். சிவகிரி ஒரு ஜமீன் கிராமம். அவர் பிறந்தது. வளர்ந்தது, கல்யாணம் செய்தது, பிள்ளை பெற்றது எல்லாம் அந்த ஊரில்தான், மூன்று தலைமுறைகளாகவிவசாயம் செய்துவந்தசாதாரண விவசாயக் குடும்பத்தில்தான் இருளப்பக் கோனார் பிறந்தார். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சிவகிரி ஜமீன் நிலத்தில் உழுது சாகுபடி செய்துதான் பிழைத்து வந்தார். இந்தியாவில் சாதாரண விவசாயிகள் பாடே திண்டாட்டம். அதிலும், கவனிப்பற்ற காட்டோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறு ஜமீனில் சிறு ஜமீனைக் கொண்டு பெருவாழ்வு வாழ்ந்து வரும் ஜமீன்தாரின் கெடுபிடி தர்பாரில், பிழைப்பு நடத்த முனைந்த இருளப்பக் கோனாரின் வாழ்க்கை சொல்லும் தரமன்று. நிலப்பிரபுத்துவத்தின் சகலவிதமான கொடுமைகளுக்கும் அவர் பலியானார். நாளுக்கு நாள் கடன், அரைப் பட்டினி, சூறைப் பட்டினி, ஜமீன் வசூல் கெடுபிடிகள், ஜப்தி, அடி, உதை எல்லாம் அவருக்குப் பழகிப் பழகி மரத்துப் போன விஷயங்களாகி விட்டன. வருஷம்முழுதும் எலும்பு முறியப் பாடுபட்டும், தமக்கும்தம் மனைவிக்கும் வேண்டிய அவசியத் தேவைகளைக்கூட