பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

பஞ்ச தந்திரக் கதைகள்

பார்த்து, 'இதோ, கொல்லைக்காரன் வருகிறான். நான் சொல்லுகிறபடி கேள். செத்துப் போனது போல் படுத்துக் கொள்’ என்றது. உடனே மான் குட்டி அவ்வாறே செத்த பிணம் போல் கிடந்தது.

பயிர்க் கொல்லைக்காரன் வந்து பார்த்து விட்டு இந்த மான் செத்துப் போய் விட்டது என்று நினைத்துக் கொண்டு வலையைச் சுருட்டிக் கட்டினான். அவன் வலையைச் சுருட்டிக் கட்டிக் கொண்டிருக்கும் போது, ‘இப்போதே ஓடிவிடு’ என்று கத்தியது காகம், மான் குட்டியும் சட்டென்று துள்ளிப் பாய்ந்து ஓடியது.

‘என்னையே இந்தச் சின்ன மான்குட்டி ஏமாற்றி விட்டு ஓடுகிறதே! என்று கோபம் கொண்ட கொல்லைக்காரன், கையில் இருந்த குறுந் தடியை மான் குட்டி ஓடிய திசையில் வீசினான். மான் அதற்குள் சிட்டாய்ப் பறந்து விட்டது. அவன் வீசிய தடியோ செடி மறைவில் பதுங்கியிருந்த நரி யின் மேல் விழுந்து அதைச் சாகடித்து விட்டது.

ஒருவன் செய்கின்ற நன்மையும் தீமையும் அதிக மானால், அதன் பலன் உடனடியாக அவனுக்குக் கிடைத்து விடும் என்ற உண்மை இக்கதையினால் நன்கு விளங்குகிறது.