பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

பஞ்ச தந்திரக் கதைகள்


‘நீ யார்?’ என்று கழுகு கேட்டது.

'நான் ஒரு பூனை!’ எனறது பூனை.

'நீ இப்பொழுதே இந்த இடத்தைவிட்டு ஓடிப்போய்விடு! இல்லையானால் உன் உயிர் போய்விடும்' என்று கழுகு எச்சரித்தது.

'ஐயா கழுகாரே, முதலில் என் கதையைக் கேளுங்கள். அதன் பின் நீங்கள் என் மேல் கோபித்துக் கொண்டாலும் சரி. சாதி வேறுபாட்டை மனத்தில் கொண்டு மற்ற பிராணிகளைக் கொல்லுவதும், சாதிக் கொரு நீதி என்ற முறையில் உபசாரம் செய்வதும் நேர்மையான முறையல்ல. அவனவன் கொண்டுள்ள ஒழுக்கங்களைக் கண்டபின்பே எது செய்ய வேண்டுமோ அது செய்ய வேண்டும்’ என்று பூனை கூறத் தொடங்கியது.

'நீ இங்கு எதற்காக வந்தாய்? அதை முதலில் சொல்’ என்றது கழுகு.

"நான் கங்கைக் கரையில் வாழ்கிறேன். நாள் தோறும் கங்கை நதியில் உடல் முழுவதும் அமிழக்குளித்து, சாந்திராயணம் என்ற விரதத்தைச் செய்து வருகிறேன். நீர் மிகுந்த புண்ணியவான் என்று கேள்விப்பட்டேன். அதனால் உம்மைப் பார்த்துப் போகவே புறப்பட்டு வந்தேன். ஏனெனில், வயது முதிர்ந்த அறிவாளிகள் எங்கிருக்கிறார்கள் என்று. கேட்டு அவர்களிடம் தருமோபதேசம் கேட்பது ஒரு