பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

பஞ்ச தந்திரக் கதைகள்


நேரத்திலேயே, இப்போதே போய் அந்தக் கோட்டான்களை வளைத்துக் கொண்டு அடித்துக் கொன்று போட்டுவிட்டு வருவதே நல்லது என்று நான்காவது அமைச்சுக் காகம் கூறியது.

முதல் நான்கு அமைச்சுக் காகங்களும் ஒன்றையொன்று மறுத்தும், தத்தமக்குத் தெரிந்ததைக் கூறியும் யோசனை சொல்ல, ஐந்தாவது அமைச்சுக் காகம் பேசாமல் இருந்தது.

அந்த ஐந்தாவது அமைச்சுக் காகம் மிக வயதான கிழட்டுக் காகம். அமைச்சுத் தொழிலில் நெடுநாள் அனுபவமும், தந்திரத்தில் பெருந்திறமையும் கொண்டது.

சிரஞ்சீவி என்ற அந்தக் காகத்தை நோக்கி, ' உன் கருத்து என்ன? சொல்’ என்று அரச காகம் கேட்டது.

விதையைச் சும்மா வைத்திருந்தால் பயன் ஒன்றும் இல்லை. அதை ஒரு நிலத்தில் விதைத்தால் தான் அது விளைந்து பயன் கொடுக்கும். அதுபோல, அமைச்சர்களிடம் மந்திராலோசனை செய்வது மட்டும் பயன்படாது. அதை மன்னர்கள் மனத்தில் இருத்திச் செயல்பட முற்பட்டால்தான் சரியான பயன் உண்டாகும்.

'பகைவர்களோடு, நட்புக் கொண்டு கூடியிருப்பது ஒரு முறை; கூடியிருந்து அவர்களை பகைவர்களோடு, நட்புக் கொண்டு கூடியிருப்பது ஒரு முறை; கூடியிருந்து அவர்களைக் கெடுப்