பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோட்டான் குலத்தைக் கூடிக் கெடுத்த காகம்

115

பது ஒரு முறை: நாட்டை விட்டுப் போவது ஒரு முறை; நாட்டிலேயே தகுந்த கோட்டையில் பாதுகாப்பாக இருப்பது ஒரு முறை; இருக்கும் இடத்தை விட்டுப் போகாமல் இருப்பது ஒரு முறை; நட்புப் பிரித்தல் ஒரு முறை; இப்படியாக ஆறு முறைகள் அரசர்கள் கையாளக் கூடியவைகளாகும்.

ஒரு செயலைச் செய்யக் கூடிய அங்கங்கள் ஐந்து எனப்படும். அவை, அந்தச் செயலுக்கான முயற்சிகளில் ஈடுபடுதல், அதற்கான காலத்தையும் இடத்தையும் ஆராய்தல், அதற்கு வேண்டிய பணமும் ஆளுதவியும் தேடுதல், ஒருவன் தனக்குச் செய்ததை யொத்த செயலைத் தானும் செய்தல், சமாதானம் செய்து கொள்ளுதல் என்பன ஐந்தும் ஒரு செயல் முறையின் அங்கங்களாகும்.

‘ஒப்பந்தம் செய்தல், தானமாக வழங்குதல், பகைத்தல், தண்டித்தல் என்று உபாயங்கள் நான்காகும்.

'ஆர்வம், மந்திரம், தலைமை ஆகிய சக்திகள் மூன்றாகும்.

'ஆறு குணங்கள், ஐந்து அங்கங்கள், நான்கு உபாயங்கள், மூன்று சக்திகள் ஆகியவற்றிலே தக்கவற்றை ஆராய்ந்து கொண்டு நடத்துவதே அரசர்

'நம்மினும் வலிமை யுள்ளவர்களோடு சேர்ந்திருப்பது நமக்கு நன்மை தராது. ஆகவே சமாதானம்