பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

பஞ்ச தந்திரக் கதைகள்

செய்து கொண்டு நாம் நன்றாக வாழ வழியில்லை. நமக்கும் அந்தக் கோட்டான்களுக்கும் குலப்பகை. அப்படிப்பட்ட பகைவர்களுக்கு அடி பணிந்து நடப் பதும் ஆகாது என்று சிரஞ்சீவி கூறிக் கொண்டிருக்கும்போது அரச காகம், காகங்களுக்கும் கோட்டான்களுக்கும் பகை வரக் காரணம் என்ன?’ என்று கேட்டது.

‘அரசே, எல்லாம் வாயினால் வந்த வினை தான்! கழுதை தன் வாயினால் கெட்டது போல, நம் காகங்களும் வாயினாலேயே இந்தக் கோட்டான்களோடு பகை தேடிக் கொண்டன.

“ஒரு முறை காட்டில் உள்ள பறவைகளெல்லாம் கூடித் தங்களுக்கோர் அரசனைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தன. அவை யாவும் ஒரு கோட்டானைத் தங்களுக்கு அரசனாகப் பட்டம் கட்டி அதன் ஆணைப்படி வாழ்வதெனப் பேசி முடித்து வைத்திருந்தன. அப்போது அங்கு ஒரு கிழட்டுக் காக்கை போய்ச் சேர்ந்தது.

போயும் போயும் ஒரு கோட்டானையா நமக்கு அரசனாகத் தேர்ந்தெடுத்தீர்கள்? இந்தக் கோட்டான் குலத்திலும் நல்லதல்ல, குணத்திலும் நல்ல தல்ல. அத்தனையும் தீக்குணங்கள். கோட்டான் என்ற சொல்லே அருவருப்புக்குரியது. இரவில் நட மாடும் இந்தக் கோட்டானுக்குப் பகலில் கண்கள் குருட்டுக் கண்களாயிருக்கும். பார்வைக்கு இது கோரமாகக் காட்சியளிக்கும். முகத்திலே அழகும்