பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோட்டான் குலத்தைக் கூடிக் கெடுத்த காகம்

121


அவர்கள் அரசனுக்குத் தீய யோசனை கூறி உங்கள் கூட்டத்தோடு சண்டையிடும்படி தூண்டிவிட்டார்கள். வேண்டாம் வீண் பகை என்று நான் எவ்வளவோ தடுத்துப் பார்த்தேன். யாரும் கேட்கவில்லை. உங்களோடு சண்டையிட்டார்கள். உங்கள் குலத்தில் பலரைக் கொன்று போட்டார்கள். நான் சொன்னேன், 'வீண் சண்டைக்குப் போகிறீர்கள். அவர்கள் ஒரு நாள் வந்து நம்மை வளைத்துக் கொண்டு அடித்துக் கொன்று விடுவார்கள்’ என்று. யாரும் கேட்கவில்லை. நேற்று இரவு நான் சொன்னபடியே நடந்து விட்டது.

‘கால் வேறு தலை வேறாகக் கிடந்த காகங்கள் பல. கரிய சிறகு வேறு வால் வேறாகத் துண்டுபட்ட காகங்கள் பல. குடல் வேறு வாய் வேறாகக் கிழிக்கப் பட்ட காகங்கள் பல. தோல் வேறு துடை வேறாகத் துண்டுபட்ட காகங்கள் பல. இப்படி எங்கள் கூட்டமே அழிந்து போய் விட்டது. நானும் இன்னும் நான்கு மந்திரிகளும் எங்கள் அரசனும், தப்பிப் பிழைத்தோம். அடிபட்ட காகங்களின் கீழே நடுநடுங்கி மறைந்து கிடந்த நாற்பது காகங்கள் பிழைத்துக் கொண்டன. எல்லாவற்றையும் ஒன்றாகக் கூட்டி, அரசன் கேட்டான், இனி என்ன செய்யலாம் என்று. அப்போது ஓர் அமைச்சன் பகல் நேரத்தில் நாம் அந்தக் கோட்டான்களைப் பழி வாங்குவோம் என்றது. இன்னோர் அமைச்சன் வேண்டாம் வேறு இடம் போவோம்’ என்றது. 'நம் பகையைத் தேடிக்கொண்ட அந்தக்

ப–8