பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

பஞ்ச தந்திரக் கதைகள்


சிறிது தூரம் சென்றதும், இரண்டாவது வஞ்சகன் வேதியன் எதிரில் வந்து, பெரியவரே, செத்துப்போன கன்றுக்குட்டியைத் தூக்கிக் கொண்டு போகிறீர்களே. உங்கள் குலத்துக்கும் தகுதிக்கும் பொருத்தமாயிருக்கிறதா?' என்று கேட்டான்.

ஆட்டைப் பார்த்துக் கன்றுக் குட்டி என்கிறாயே, உன் கண் என்ன குருடா?’ என்று கோபத்துடன் கேட்டுவிட்டு மேல் நடந்தான் வேதியன்.

சிறிது தூரம் சென்றதும் மூன்றாவது வஞ்சகன் குறுக்கில் வந்தான். இது என்ன நீசத்தனம்? சண்