பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஏமாந்த வேதியன்

145

டாளன் கூட இப்படிச் செய்யமாட்டானே? வேதியரே கழுதையைச் சுமந்து செல்லுவது சரிதானா?” என்று கேட்டான்.

இதைக் கேட்டவுடன் வேதியன் மனத்தில் ஐயம் தோன்றியது. நான் ஆட்டைத் தூக்கிக் கொண்டு வருகிறேன். ஆனால், வழியில் பார்த்த ஒவ்வொருவரும் வெவ்வேறு மாதிரியாகப் பேசுகிறார்கள். அப்படியானால், ஒவ்வொரு முறையும் அந்த ஆடு வெவ்வேறு விதமாகக் காட்சியளித்திருக்க வேண்டும். இது சாதாரண ஆடாக இருக்க முடியாது. மாயவித்தை செய்யும் இராட்சத ஆடாக இருக்க வேண்டும். இதை இனிச் சுமந்து போவது கூடாது, அதனால் ஏதும் கெடுதி நேரலாம் என்று எண்ணி அதைக் கீழே இறக்கிவிட்டுச் சென்று விட்டான். வஞ்சகர்கள் அந்த ஆட்டைப் பிடித்துச் சென்று வெட்டிக் கொன்று சமைத்துத் தின்றார்கள்.



6. உதவி செய்த கள்ளன்

ஓர் ஊரில் ஒரு கோமுட்டி இருந்தான். அவன் சுருங்கிய தசையும், நடுங்கிய உடலும், ஒரக் கண்ணும் உடைய கிழவன். அவன் மனைவி ரதியைப் போல் அழகானவள். அவள் கிழவனிடம் பிரிய மில்லாமல் இருந்தாள். அவனிடம் நெருங்குவதே கிடையாது. கிழவனும் அவள் பிரியத்தை அடைய வழி தெரியாமல் துயரத்தோடு இருந்து வந்தான்.