பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

பஞ்ச தந்திரக் கதைகள்

பார்த்துக் கேட்டான். பதிலுக்குத் திருடனும் அரக்கனைப் பார்த்து 'நீ யார்?’ என்று கேட்டான்.

“எட்டுத் திக்கிலும் எவரும் கண்டு நடுங்கும் பிரம்மராட்சசன் தான்!” என்று அரக்கன் கூறினான்.


'செல்வர்களின் வீட்டில் குவிந்திருக்கும் பணத்தைக் கன்னமிட்டுக் கொள்ளையடிக்கும் கள்ளன் நான்!' என்றான் திருடன்.

‘இன்றிரவு நீ என்ன கருதிப் புறப்பட்டாய்?” என்று அரக்கன் கேட்டான்.