பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.அன்பரான அரக்கனும் கள்ளனும்

149.


‘நீ எதற்குப் புறப்பட்டாய்? அதை முதலில் சொல் என்றான் கள்ளன்.

‘இந்த வேதியன் உடலைத் தின்ன வந்தேன்’ என்றான் அரக்கன்.

'நான் இவன் பசுவைத் திருட வந்தேன்’ என்றான் திருடன்.

'அப்படியானால் இருவரும் ஒன்றாய்ப் போவோம்’ என்று பேசிக் கொண்டு இருவரும் வீட்டு முன் வாசலுக்கு வந்து சேர்ந்தனர்.

அரக்கன் திருடனைப் பார்த்து, நீ இங்கேயே இரு. முதலில் நான் போய் அந்தணனைத் தின்று விட்டு வந்துவிடுகிறேன்’ என்றான்.

‘இல்லை, நான்போய் முதலில் பசுவை அவிழ்த்து ஓட்டிக் கொண்டு வந்து விடுகிறேன்' என்றான் திருடன்.

'ஏதாவது ஓசை கேட்டால் அந்தணன் விழித்துக் கொள்வான். அவன் விழித்துக் கொண்டு விட்டால், நான் அவனைச் சாப்பிட முடியாது' என்றான் அரக்கன்.

நேரமானால் யாராவது வந்து விடுவார்கள். யாராவது வந்தால் நான் பசுவைத் திருட முடியாது. என்றான் கள்ளன்.

நான் முந்தி, நீ முந்தி என்று இருவருக்கும் சச்சரவு அதிகமாகியது. இவர்கள் சண்டையிட்டுக்