உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

பஞ்ச தந்திரக் கதைகள்

கொண்ட சத்தத்திலேயே அந்தணன் விழித்துக் கொண்டு விட்டான். அவன் தன் பிள்ளைகளையும் எழுப்பிக் கொண்டு வந்து, வாசல் கதவைத் திறந்தான்.

'அந்தனரே! உங்களைக் கொல்ல வந்தான் இவன்' என்று திருடன் அரக்கனைக் குற்றம் சாட்டினான்.

'ஐயா, உம் பசுவைக்களவாட வந்தான் இவன்' என்று அரக்கன் கள்ளனைக் குற்றவாளியாக்கினான்.

இருவரும் கூறியதைக் கேட்ட அந்தணன் 'இரண்டும் நடக்காதது பற்றி மகிழ்ச்சி இருந்தாலும் நீங்கள் வந்தவர்கள் சும்மா திரும்பிப் போக வேண்டாம். ஏதாவது பெற்றுக் கொண்டு போங்கள்’ என்று சொல்லி அவர்கள் இருவக்கும் சில பொருள்களை வெகுமதியாகக் கொடுத்தனுப்பினான்.

அவர்கள் அந்தணனின் நல்ல குணத்தைப் பாராட்டி, அன்று முதல் அவன் நண்பர்களாக மாறி அவனுக்குப் பல உதவிகள் செய்து வந்தார்கள்.

பகைவர்களிடம் அன்பு காட்டினால் அவர்களும் நண்பர்களாக மாறி விடுவார்கள்.



8. இரகசியத்தை வெளியிட்டழிந்த பாம்புகள்

ஓர் இளவரசன் இருந்தான். அவனைப் பல நாட்களாக வயிற்று நோய் வாட்டிக் கொண்