பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

பஞ்ச தந்திரக் கதைகள்

கடுகை உண்டதும், வயிற்றுக்குள் இருந்த பாம்பு செத்து விட்டது. அவன் வயிற்று நோயும் தீர்ந்தது. தான் இரகசியத்தைத் தெரிந்து கொண்டதை யறிந்தால் புற்றுப் பாம்பு என்ன செய்யுமோ என்று பயந்த இளவரசி, வெந்நீரைக் காய்ச்சிப் பாம்புப்புற்றிலே ஊற்றினாள். புற்றுப் பாம்பும் செத்தது. வயிற்று நோய் தீர்ந்த இளவரசன் தன் ஊருக்குத் திரும்பி இளவரசியோடு இன்பமாக இருந்து தன் நாட்டை ஆண்டு வந்தான்.

தன் இரகசியம் யாரும் அறியும்படி பேசக்கூடாது.



9. வேட்டைக்குதவிய புறாக்கள்

ஒரு நாள் ஒரு வேடன், பறவைகள் பிடிப்பதற்காகக் காட்டில் சுற்றிக் கொண்டிருந்தான். வழியில் ஒரு பெட்டைப் புறா அகப்பட்டது. அதைத் தன் கையில் இருந்த கூட்டிற்குள் அடைத்து எடுத்துக் கொண்டு சென்றான். செல்லும் வழியில்,திடீரென்று வானம் இருண்டு மழை பொழியத் தொடங்கிற்று. சூறைக்காற்றும் சேர்ந்து வீசவே, மேற்கொண்டு போகப் பயந்து, ஒரு மரத்தின் கீழ்த் தங்கினான்.

அந்த மரத்தின்மேல் இருந்த ஆண் புறா ஒன்று, தன் துணைவியான பெட்டைப் புறாவைக் காணாமல் கலங்கியது. 'இந்தப் புயல் மழையில் எகுங் போய்ச் சிக்கியதோ? காட்டில் செல்கையில்