பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாம்பு வாகனமேறிய தவளை

165

தீண்டி விட்டேன். உடனே அந்த முனிவர் என்னைச் சபித்து விட்டார்." நீ தவளையைச் சுமக்கக்கடவது, அந்தத் தவளையிடமே இரை வாங்கி உண்ணக் கடவது” என்று அவர் சாபம் இட்டுவிட்டார். நான் சாபமடைய நேர்ந்த என் தலைவிதியை நினைத்து வருத்தமாயிருக்கிறேன். இனி என் சாபம் நிறை வேறினால்தான் நான் பிழைக்க முடியும். உங்கள் அரசனிடம் சொல்லி, மேலும் ஆபத்து வராமல் காப்பாற்றச் சொல். நான் என்றும் உங்கள் அடிமையாக இருப்பேன்" என்று கூறியது.

தூதன் திரும்பி வந்து தவளையரசனிடம் பாம்பரசன் கூறிய கதையை அப்படியே கூறிற்று. தவளையரசன் தன் முதலமைச்சனைக் கூப்பிட்டு யோசனை கேட்டது.

"பாம்பரசன் நம்மைச் சுமப்பதென்றால் சாதாரணமா? தினமும் அவன் தங்களைச் சுமப்பதென்றால் வரும் பெருமையே பெருமை! நம்மைப் போல் உயர்ந்த சாதி உலகத்திலேயே இல்லையென்றாகி விடும்" என்று அந்த மண்டுகம் கூறியது.

உடனே தவளையரசன், பாம்பரசனைக் கூட்டி வரச் சொல்லியது.

"பாம்பே, நீ என்னைத் தினமும் சுமந்து கொண்டிருந்தால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தவளை உனக்கு உணவாகக் கிடைக்கும்" என்று கூறியது.