பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

பஞ்ச தந்திரக் கதைகள்


"ஆகா! என் பாக்கியம்! சீக்கிரம் என் சாபம் தீர்த்தால் போதுமானது" என்று சொல்லித் தலையைக் குனிந்தது பாம்பு.

அதன் தலையின் மேல் தவளையரசன் ஏறிக் கொண்டது. "இன்று என் எண்ணம் பலித்தது. இந்தத் தவளைகள் எல்லாம் என் வயிற்றுக்குத்

தான்" என்று மனத்திற்குள் எண்ணிக் கொண்ட பாம்பு, தவளையரசனைப் பார்த்து, “இனி நான் உங்களைப் பிரியவே மாட்டேன்" என்று சொன்னது.

தவளையரசனும் மனமகிழ்ந்து ஒரு தவளையைத் தின்று கொள்ளும்படி அனுமதி கொடுத்தது.

ஒவ்வொரு நாளும், ஏதாவது சொல்லித் தவளையை மன மகிழ வைத்துப் பாம்பு ஒவ்வொரு தவளையாக விழுங்கிக் கொண்டு வந்தது. கடைசியில் தவளையரசனைத் தவிர மீதித் தவளைகள்