பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எருதும் சிங்கமும்

15


சத்தத்தைக் கேட்டுப் பயந்தது. கடைசியில் பார்த்தால் அது வெறும் தோல் முரசாக இருக்கக் கண்டது. நீங்கள் பயப்பட வேண்டாம். நான் போய் இந்த முழக்கத்தின் காரணத்தை அறிந்து வருகிறேன்' என்று சொல்லி நரி புறப்பட்டது.

காட்டுக்குள்ளே தேடிக் கொண்டு சென்ற நரி, சிறிது தூரத்தில் அந்தக் காளை மாட்டைக் கண்டது. அதனுடன் பேசி அதன் நட்பைப் பெற்றது. சிங்கத்திடம் திரும்பி வந்து, அரசே, 'அது நம்மைப் போல் ஒரு மிருகம் தான். ஆனால் முரட்டு மிருகம், இருந்தாலும் அது தங்களுடன் நட்புக் கொள்ளவே விரும்புகிறது' என்று கூறியது.

'அப்படியானால், அதை இங்கே அழைத்து வா’ என்று சிங்கம் கூறியது.

நரி அவ்வாறே எருதை அழைத்து வந்து சிங்கத்திடம் விட்டது. எருதும் சிங்கமும் அன்று முதல் உயிர் நண்பர்களாய் வாழத் தொடங்கின. சிங்கம் அந்த எருதையே தன் அமைச்சனாக்கிக் கொண்டது. இவ்வாறு பல நாட்கள் கழிந்தன.

ஒரு நாள் காட்டு மிருகங்களும் அமைச்சர்களாகிய நரிகளும் ஒன்று கூடி, அரசனுக்கோ நம்மிடம் அன்பில்லை. இரையே நமக்குச் சரியாகக் கிடைக்கவில்லை. இனி நாம் என்ன செய்வது?’’ என்று ஆலோசித்துக் கொண்டிருந்தன. அப்போது முதல் நரி இரண்டாவது நரியைப் பார்த்து, 'யானை