பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

பஞ்ச தந்திரக் கதைகள்

மறுபடி பாம்பு வருவதற்குள், அது தன் மனைவித் தவளையை அழைத்துக் கொண்டு வேறொரு நீர் நிலைக்குப் போய் விடடது.

அந்த நீர் நிலையில் இருந்த தவளைகளுடன் அது அன்பாகப் பழகிக்கொண்டு இன்பமாக இருந்தது.


3. அறிவில்லாமல் ஒழிந்து போன கழுதை

ஒரு காட்டில் ஒரு சிங்கம் அரசு புரிந்து வந்தது. அதன் அமைச்சனாக ஒரு நரி இருந்து வந்தது. ஒரு நாள் அந்தச் சிங்கத்திற்கு வயிற்று வலி ஏற்பட்டது. வயிற்று வலிக்குக் கழுதை ஈரல் சாப்பிட்டால் நல்ல தென்று யாரோ அதற்குச் சொன்னார்கள். அதனால் அது நரியைக் கூப்பிட்டு, "அமைச்சனே, நல்ல கழுதை ஈரலாகப் பார்த்துக் கொண்டு வா!" என்று கூறியது.

கழுதை எங்கே சிடைக்கும் என்று தேடிக் கொண்டு நரி ஒர் ஊருக்கு வந்தது. அங்கு ஒரு சுனையின் பக்கம் சேர்ந்த போது ஒரு வண்ணான் ஒரு கழுதையை ஒட்டிக் கொண்டு வந்தான். சுனையை நெருங்கியவுடன், வண்ணான் கழுதையின் மேலிருந்த பொதியைக் கீழே தள்ளிவிட்டு, அதன் கால்கள் இரண்டைச் சேர்த்துக் கட்டி’ எங்காவது மேயும்படி ஓட்டினான்.