பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.அறிவில்லாமல் ஒழிந்துபோன கழுதை

183

சிங்கம் அங்கே சந்தியாவந்தனம் செய்து கொண்டிருக்க இங்கே செத்துக் கிடந்த கழுதையின் கண்களையும் காதுகளையும் நரி தின்று முடித்தது.

திரும்பி வந்த சிங்கம், “இந்தக் கழுதையின் கண்காதெல்லாம் எங்கே?"என்று கேட்டது,

‘கண்ணும் காதும் இருந்தால் ஒருமுறை அகப் பட்டுத் தப்பிய கழுதை திரும்பவும் வந்தாசாகும்?" என்று கேட்டது நரி.

ஊனப்பட்ட மிருகங்களைச் சிங்கம் தின்பது கிடையாது. ஆகவே, அது கழுதையின் ஈரலைத் தின்னாமலே போட்டு விட்டுப் போய்விட்டது. நரி அந்தக் கழுதையை இழுத்துக் கொண்டு போய்த் தன் கூட்டத்துடன் அதன் உடலைப் பிய்த்துத் தின்றது.

பட்டனுபவித்து மீண்டும் தவறு செய்பவர்களை என்னவென்று சொல்வது? அறிவில்லாமல் அகப் பட்டிறந்த கழுதையைப் போலத்தான் அவர்களும் துன்பப்படுவார்கள்.


4. குயவன் சேனாபதியானான்

ஒரு சிற்றுாரில் ஒரு குயவன் இருந்தான். ஒரு நாள் அவன் சூளையிலிருந்து மண் பாண்டங்களை எடுக்கும் போது இரண்டு பானைகள் ஒன்றாய் ஒட்டிக்கொண்டிருந்தன. அவற்றைப் பிரிக்க முயலும் போது, ஒரு பானை உடைந்து சில்லுச் சில்லாகச்