பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.எருதும் சிங்கமும்

17

‘பூ! சூழ்ச்சியால் ஆகாத காரியம் எதுவும் இல்லை. காகம் கரும்பாம்பைக் கொன்றதும், முயல் ஒரு சிங்கத்தைக் கொன்றதும், நண்டொன்று கொக்கைக் கொன்றதும் எல்லாம் சூழ்ச்சியால்தான்!’ என்று கூறியது முதல் நரி.

‘உண்மைதான். சூழ்ச்சியால் இவர்கள் நட்பைப் பிரிக்கமுடியுமே யல்லாமல் வேறு வழியில்லை. நீ அதற்கானதைச் செய்' என்றது இரண்டாவது நரி,

சிங்கம் தனியாக இருக்கும் வேளை பார்த்து, ‘அரசே, தங்களுக்கு ஒரு தீமை ஏற்பட இருப்பதை அறிந்து நான் எச்சரிக்கவே வந்தேன்’ என்று புதிர் போட்டது போல் கூறியது.

'அப்படியென்ன தீமை யது?’ என்று சிங்கம் கேட்டது.

‘அரசே, இதைப்பற்றி முன்னாலேயே சொல்லியிருப்பேன். ஆனால், உங்கள் மனத்தில் உள்ள விருப்பத்தின் காரணமாக நான் சொல்லக் கூடிய உண்மையைப் பொய்யாக எண்ணி விடுவீர்களோ என்று பயப்பட்டேன். அந்தப் பயத்தினால் தான் இதுவரை எதுவும் சொல்லவில்லை' என்று நல்லவன் போலப் பேசத் தொடங்கிய நரி மேலும் தொடர்ந்து கூறியது. "ஆனால், என் மனம் கேட்க வில்லை. நீங்கள் என்ன நினைத்தாலும், எவ்வளவு கோபம் கொண்டாலும், எவ்வாறு தண்டித்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தங்களுக்குத் தீங்கு