பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/191

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குருவிக் கூட்டைக் கலைத்த குரங்கு

189


போய், உடல் நடுநடுங்கியபடி ஒரு குரங்கு வந்தது. அது அந்த ஆலமரத்தினடியில் வந்து மழைக்கு ஒதுங்கி நின்றது. அதைப் பார்த்து தூக்கணாங் குருவிகளில் ஒன்று மிகவும் இரக்கப்பட்டது.

குரங்கை நோக்கி, "உனக்குக் கை கால் இருக்கும் போது நீ ஒரு கூட்டைக் கட்டிக் கொண்டு இருக்கக் கூடாதா? ஏன் இப்படி மழையில் நனைந்து குளிரில் நடுங்க வேண்டும்?" என்று கேட்டது.

இதைக் குரங்கு தவறாக எடுத்துக் கொண்டு விட்டது. அந்தத் குருவி, தன்னைக் கையாலாகா தவன் என்று. பழிப்பதாக அது நினைத்துக் கொண்டது. ஆகவே மிகவும் ஆத்திரம் கொண்டு, "ஏ ஊசி மூஞ்சிக் குருவியே, மூடத்தனமாக நீ