பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



190

பஞ்சதந்திரக் கதைகள்

எனக்குப் புத்தி சொல்ல வந்து விட்டாயா? எனக்கா கூடு கட்டத் தெரியாது. இருக்கட்டும். இதோ உன் கூட்டை என்ன செய்கிறேன் பார்!” என்று சொல்லிக் கொண்டே மரத்தில் ஏறிக் குருவிக் கூடுகளைச் சின்னாபின்னமாகப் பிய்த்து எறிந்தது. பாவம் அந்தக் குருவிகளும் மழையில் நனைந்து குளிரால் நடுங்கின. மூடர்களுக்கு அறிவுரை சொன்னால் கேடுதான் வரும்.


7. சாம பேத தான தண்டம்

ஒரு காட்டில் ஒரு யானை இறந்து கிடந்தது. அந்தப் பக்கமாக வந்த ஒரு நரி அதைக் கண்டது. அதன் இறைச்சியைத் தின்பதற்கெண்ணி அதன் அருகில் சென்றது. அப்போது அங்கு சிங்கம் வந்து சேர்ந்தது. நரியைக் கண்டு, “நீ யார்? என்று அதட்டியது சிங்கம்.

“அரசே, தாங்கள் கொன்று போட்ட இந்த யானையைக் காத்துக் கொண்டு நான் இருக்கிறேன் என்றது நரி.

நரி அடக்க ஒடுக்கமாகவும் சமாதானமாகவும் பேசியதைக் கண்ட சிங்கம், அதன் பேரில் இரக்கப் பட்டு,” நரியே, இது நான் கொன்ற யானை அல்ல. ஆகவே நீயே இதை எடுத்துக்கொள் என்று சொல்லிச் சென்று விட்டது.