பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சாம பேத தான தண்டம்

191

சிங்கம் சென்ற சிறிது நேரத்தில் அங்கு ஒரு புலி வந்து சேர்ந்தது. அது நரியை பார்த்து, “நீ யார்? என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று அதிகாரக் குரலில் கேட்டது.

"புலி மாமா, இதை ஒரு சிங்கம் கொன்று போட்டது. அந்தச் சிங்கம் இந்தப் பக்கத்தில் தான் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது. ஏதாவது புலி வந்தால் எனக்குச் சொல் என்று அந்த சிங்கம் சொல்லியிருக்கிறது. ஏன் என்று கேட்டேன். அதற்கு அந்தச் சிங்கம், முன்னொரு யானையை தான் கொன்று போட்டுவிட்டு, நீராடப் போயிருந்த போது, ஒரு புலி வந்து அந்த யானையைக் கடித்துத் தின்று எச்சிலாக்கி விட்டது. ஆகவே புலியை அதற்குத் தண்டிக்க வேண்டும்’ என்று சொல்லியது?"

இவ்வாறு நரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே புலி தப்பித்தேன் பிழைத்தேன் என்று அங்கிருந்து ஓடி விட்டது.

இவ்வாறு பகையுணர்ச்சியினால் புலியை மாறு படச் செய்து ஒட்டியபின் அங்கு ஒரு குரங்கு வந்தது.

‘வா, வா இவ்வளவு பெரிய யானை இறந்து கிடக்கிறது. தின்ன ஆளில்லையே என்றுதான் பார்த்துக் கொண்டிருந்தேன். இதன் உடலைக் கிழித்து.வேன்டிய அளவு தின்னு’ என்று கூறியது நரி, குரங்கும் சரி யென்று கூர்மையான தன் கை